‘துணிவு’ படத்தில் பட்டிமன்ற பேச்சாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published:

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக வரும் 31ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகு என்றும், இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தில் நடித்த இரண்டு முக்கிய கேரக்டர் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், மாய்பா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அதேபோல் நடிகர் பிரேம் , பிரேம் என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அறிவித்துள்ளார். இந்த இரண்டு கேரக்டர்களை அடுத்து மேலும் சில கேரக்டர்களின் அறிமுகம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போனிகபூர் இந்த படத்தை பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் பிசினஸ் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் இந்த படம் அஜீத்தின் மற்றொரு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மேலும் உங்களுக்காக...