நயன்தாரா படத்தில் ஹீரோயினாகும் திரிஷா!

By Velmurugan

Published:

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும், இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமாகி அதைத் தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, ஜெயம் ரவி, விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பழமொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இந்த படம் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

அடுத்ததாக இந்த மாத இறுதிக்குள் நயன்தாரா, ஜெயம் ரவி இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் அடுத்ததாக நிலேஷ் கிருஷ்ணாவின் படத்திலும், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்திலும் நயன்தாரா நடிக்க உள்ளார். அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் நயன்தாரா, அவ்வப்பொழுது தனது குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் நேரத்தை செலவிடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ட்ரெண்டாகி வருவதும் வழக்கம்.

இந்நிலையில் நயன்தாராவின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம். ஏ. ஜவஹர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷுக்கு ஜோடியாக நயன்தாரா இந்த படத்தில் நடித்திருப்பார். இந்தத் திரைப்படம் “ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே” என்ற தெலுங்குத் திரைப்படத்திலிருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் யாரடி நீ மோகினி என்ற திரைப்படமாக வெளியாகியிருந்தது.

ஜெயிலர் படத்தின் தெறிக்க விடும் வெற்றியை தொடர்ந்து சம்பள விசயத்தில் கரார் காட்டும் ரஜினி!

தமிழில் இந்தத் திரைப்படம் 210 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்பொழுது தெலுங்கில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே 2 திரைப்படம் தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடிகை திரிஷா ஹீரோயின் ஆக நடித்திருப்பார். இப்பொழுது இரண்டாவது பாகத்திலும் திரிஷா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் நடிகை திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோயின் ஆக பிரபலமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மேலும் உங்களுக்காக...