தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் கங்கை அமரன் அவர்களின் மகன் தான் வெங்கட் பிரபு. இவரின் பெரியப்பா இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் இளையராஜா அவர்களின் ஸ்டுடியோவில் பின்னணி பாடகர் ஆக இருந்த வெங்கட் பிரபு 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இயக்குனராக அறிமுகமான முதல் படத்தின் மூலமாகவே பிரபலமான வெங்கட் பிரபு முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக 2008 ஆம் ஆண்டு சரோஜா 2010 ஆவது ஆண்டு கோவா ஆகிய திரைப்படங்களை இயக்கினார். 2011 ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து மங்காத்தா என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தொடர்ந்து மாஸ், மாநாடு போன்ற திரைப்படங்களை இயக்கி வணிக ரீதியான வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் வெங்கட் பிரபு. தற்போது அவர் பிரம்மாண்டமாக இயக்கி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் கோட். இத் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் தற்போது கோட் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, இந்த படத்திற்கு முதலில் வேறு தலைப்பை தேர்ந்தெடுத்ததை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், கோட் திரைப்படத்திற்கு முதலில் நாங்கள் காந்தி என்று தான் பெயரிட விருப்பப்பட்டோம். ஆனால் அந்த தலைப்புக்கான அனுமதி எங்களுக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் பரவாயில்லை கோட்டிற்கும் காந்திருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஏனென்றால் கோட் என்றால் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் தி டைம் அதேபோல் காந்தி அவர்களுக்கும் இந்த வாக்கியம் பொருந்தும் என்று பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.