மாமன் படத்துல அக்காவா ரியலா நடிச்சிருக்கீங்கனு சொல்றாங்க… அதுக்கு காரணம் இதுதான்… மனம் திறந்த ஸ்வாசிகா…

ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா. 2009 ஆம் ஆண்டு…

swasika

ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.

2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்வாசிகா மாமன் திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், மாமன் திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் ரியலிஸ்டிக்காக நடித்திருக்கிறீர்கள் என்று பலர் என்னை பாராட்டுகிறார்கள். நான் அப்படி நடித்ததற்கு காரணம் நிஜ வாழ்க்கையிலும் நான் ஒரு அக்காவாக இருப்பதால்தான் அந்த உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இயக்குனர் எனக்கு படம் முழுவதும் வழிகாட்டியாக இருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த உதவி செய்தார் என்று பகிர்ந்து இருக்கிறார் நடிகை ஸ்வாசிகா.