சக்தியை பழிவாங்க துடிக்கும் தென்னரசு… சக்திவேல் தொடரின் இன்றைய எபிசோட்…

Published:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் சனிக்கிழமை எபிசோடில் சிக்கல் சிவபதி தனக்கு ஆதரவாய் பேசியதை நினைத்து தேனு மகிழ்ச்சி அடைகிறாள். இனி தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது என்று நினைத்துக் கொள்கிறாள். இன்னொரு புறம் தென்னரசு குடித்து விட்டு சக்தியிடம் பிரச்சனை செய்கிறான். அதைத் தடுக்க வேலு வருகிறான். அதோடு அன்றைய எபிசோட் முடிந்திருந்தது.

அதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதைக் காணலாம். தென்னரசு சக்தியிடம், நீ யாரு என் வாழ்க்கையில் தலையிடுவதற்கு, என் வாழ்க்கையில் முடிவு எடுப்பதற்கு, உன்னை சும்மா விட மாட்டேன் என்கிறான். என்னை இதுவரை எதுவும் சொல்லாத என் அப்பாவையே என்னை கை நீட்டி அடிக்க வச்சிட்ட என்று சொல்கிறான்.

அதற்கு சக்தி, இந்த உலகத்தையே இன்னும் பார்க்காத வயிற்றில் இருக்கும் பிஞ்சு குழந்தையை கொல்லணும்னு நினைக்கிறது பெரிய தப்பு, அது மகா பாவம் மாமா. அதுக்காக தான் நான் அப்படி செஞ்சேன். மற்றபடி உங்கள அவமானப் படுத்தணும்னு நான் எதுவும் செய்யல என்று கூறுகிறாள்.

உடனே தென்னரசு, நீ என்ன சொன்னாலும் சரி, நீ தான் எனக்கு முதல் எதிரி என்று கூறி அடிக்கச் செல்கிறான். உடனே வேலு வந்து தடுத்து விடுகிறான். தென்னரசுவைப் பார்த்து, நீ பண்றது தப்பு அண்ணா, இந்த குடும்ப வாரிசை அழிக்க நினைச்சது உன் தப்பு. அதான் நாங்க தலையிட வேண்டியதா போச்சு. நீ சக்தியை எதாவது பண்ணனும்னு நெனைச்சா என்னை மீறி தான் அவளை தொட முடியும். உன்னால எதுவும் செய்ய முடியாது, நீ நிதானத்துல இல்லை, காலைல பேசிக்கலாம் போ என்று அனுப்பிவிடுகிறான்.

பின்பு வேலு சக்தியிடம், நீ அண்ணா பேசினதை மனசில வச்சுக்காத, ந எல்லாத்தையும் பார்த்துகிறேன் என்று சொல்கிறான். என் குடும்பத்துக்காக நீ எவ்ளோ பெரிய விஷயம் பன்னிருக்க, இதில் இருந்தே என் மேல உனக்கு அன்பு இருக்குனு தெரியுது என்று சொல்கிறான். அதற்கு சக்தி நான் உனக்காக பண்ணல, குழந்தைக்காக தான் பண்ணினேன். அனால் சிக்கல் சிவபதி மாமா இன்னிக்கு பேசினது ஆச்சர்யமா இருந்துச்சு. அவரு கோபக்காரர், முரடனு நெனச்சிட்டு இருந்தேன். அவர் இன்னிக்கு தேனு அக்காக்கு ஆதரவா பேசினது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அவருக்கு உள்ளேயும் ஒரு நல்ல மனசு இருக்குனு தெரிஞ்சிகிட்டேன் என்று கூறுகிறாள்.

அதற்குப் பின்பு, தேனு வீட்டு வேலைகளை முடித்து விட்டு அமர்ந்திருக்கிறாள். அங்கு ஜோதி தேனுவிற்காக குங்குமப்பூ போட்ட பாலை குடிக்கச் சொல்லி கொடுக்கிறாள். கொடுத்துவிட்டு தேனுவிடம், உனக்காக இத்தனை வருஷம் நான் மாமாவிடம் பேசியிருப்பேன். ஆனா நீ இன்னிக்கு வந்த சக்தி பேச்சைக் கேட்டுகிட்டு இருக்க. இது நல்லதுக்கு இல்ல. சக்தி நல்ல பெயர் எடுக்கிறதுக்காக தான் இப்படி செஞ்சிருக்காளே தவிர உன் மேல அக்கறையையெல்லாம் இல்லை. அதனால அவ கூட சேர்ந்துட்டு ஆட்டம் போடாத. நீ இந்த வீட்டில இருக்கணும்னா என் தயவு இருந்தா மட்டும் தான் முடியும், பார்த்து நடந்துக்க என்று சொல்லிவிட்டு போகிறாள். அதோடு இன்றைய எபிசோட் முடிந்தது. மேலும் காண விஜய் டிவி தொலைக்காட்சியைக் காணாதவறாதீர்கள்.

மேலும் உங்களுக்காக...