ரஜினியுடன் நடிக்க மறுத்து.. பின்பு ஒரு கண்டிஷன் போட்டு நடித்த முன்னணி நடிகை!

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படம் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 169வது படம் ஆகும். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி இளம் இயக்குனருடன் நடிக்க ரஜினி தயாராக உள்ளார்.

தற்பொழுது ரஜினிக்கு 72 வயது ஆன நிலையிலும் அவரை வைத்து படங்கள் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் லைன் கட்டி நின்று வருகின்றனர். அந்த அளவிற்கு ரஜினியின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மாஸ் இருக்க தான் செய்கிறது.

இருப்பினும் ரஜினியின் ஆரம்ப காலக்கட்டத்தில் இவருடன் சேர்ந்து சில நடிகைகள் நடிக்க மறுத்து உள்ளனர். அதன் பின் எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் சேர்ந்து நடித்து அவரை பற்றி புரிந்து கொண்டு இன்று நான் ரஜினியுடன் நடித்த நடிகை என பெருமைப்பட்டு பேசி வருகின்றார்கள்.

அந்த வகையில் ரஜினியுடன் நடிக்க மறுத்த ஒரு நடிகை தான் நடிகை நதியா. இவர் பூவே பூச்சுடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படங்களில் தன்னுடைய கேரக்டர் வலிமையானதாக உள்ளதா என்பதை மட்டுமே அவர் பார்த்து நடிப்பது வழக்கம். அதுமட்டுமில்லாமல் கிளாமராக நடிக்க மாட்டேன், நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், கட்டிப்பிடித்து படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என முன்கூட்டியே அவர் தனது நிபந்தனைகளை விதித்து விடுவார்.

D5flrcjU8AAUS3y

அவரது நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரது கால்ச்சீட்டுக்காக தவமாய் காத்திருந்த வரலாறு உண்டு. இந்த நேரத்தில் தான் நதியா நடிகர் ரஜினியுடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

ரஜினி உடன் சில காரணத்தால்  நதியா நடிக்க மறுத்துள்ளார். அதன் பின் ரஜினியுடன் சேர்ந்து ராஜாதி ராஜா என்னும் ஒரு படத்தில் மட்டுமே நடித்திருப்பார். அந்த படத்திலும் ரஜினியுடன் நெருக்கமான காட்சிகள் இருக்க கூடாது என கண்டிசன் வைத்துதான் நதியா நடித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்த விஜய்! தெறிக்க விடும் அப்டேட்!

ராஜாதி ராஜா படத்திற்கு முன்னதாக பல படங்கள் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க கிடைத்த வாய்ப்பையும் அவர் மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்திற்காக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

அதன் பிறகு அவர் தாமிரபரணி, சண்டை, பட்டாளம் என்னும் தமிழ் படங்களிலும் சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து தற்போது தோனி தயாரிப்பில் உருவாக்கி இருக்கும் எல்சிஎம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆன இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

 

 

 

 

 

 

மேலும் உங்களுக்காக...