ஒரு வழியாக ஜார்ஜியாவில் பாடல் காட்சியை முடித்த ‘சந்திரமுகி 2’ படக்குழு! மாஸ் அப்டேட்!

Published:

ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் 2005 ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 17 ஆண்டுகள் கழிந்து மீண்டும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மிக பிராம்மாண்டமான பொருள் செலவில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, படத்தில் வடிவேலு, ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க‌ உள்ளனர். திரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கப்பட்டது. மேலும் ‘சந்திரமுகி 2’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மரகதமணி சந்திரமுகி 2 படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன், ரவி மரியா, கார்த்திக் சீனிவாசன் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது. இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வேட்டையான் ராஜாவின் அவையில் நடனக் கலைஞர் சந்திரமுகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படக்குழு கங்கனாவின் போஸ்ட்ரை வெளியிட்டு படத்தின் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது.

வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்த விஜய்! தெறிக்க விடும் அப்டேட்!

மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, சமீபத்தில் இப்படத்தின் பின்னணி இசையை 50 சதவிகிதம் முடித்துள்ளதாக தெரிவித்த நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் இறுதிப் பாடல் காட்சிக்காக இந்த மாத தொடக்கத்தில் படக்குழு ஜார்ஜியாவுக்குச் சென்றுள்ளது. தற்போது இப்படத்தின் பாடல் காட்சிகள் முடிவடைந்து படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உங்களுக்காக...