சிவாஜி மட்டுமல்ல.. கே.பாலசந்தரின் ஒரே படத்தில் நடித்தவர் சரோஜாதேவியும் தான்.. தாமரை நெஞ்சம் படத்தின் கதை!

By Bala Siva

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான எதிரொலி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த நிலையில் அபிநய சரஸ்வதி நடிகை சரோஜாதேவியும் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரே ஒரு படத்தில் நடித்தார் என்றால் அது தாமரை நெஞ்சம் என்ற படம் தான்.

இந்த படத்தில் தான் முதல் முதலாக ஜெமினி கணேசன் மற்றும் கே. பாலச்சந்தர் இணைந்தனர். அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கிய பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்தாலும் சரோஜாதேவி நடிக்கவில்லை. சரோஜாதேவி மட்டுமின்றி இந்த படத்தில் வாணிஸ்ரீ முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அவரும் பாலச்சந்தர் இயக்கத்தில் இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.

இந்த படத்தின் கதை என்னவெனில் சரோஜாதேவி மற்றும் வாணிஸ்ரீ ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகளாக இருப்பார்கள். சரோஜாதேவி ஒரு வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் வேலையில் செய்வார். அப்போது அந்த வீட்டின் எஜமானர் ஜெமினி மீது காதல் வரும். ஆனால் ஜெமினியோ சரோஜாதேவியின் தோழியான வாணிஸ்ரீயை தான் விரும்புவார்.

உங்கள் கணவர் படத்தில் நடிக்க மாட்டேன்…. எம்ஜிஆர் மனைவிக்கு கடிதம் எழுதிய பானுமதி…. என்ன காரணம்….?

thamarai nenjam3

இந்த நிலையில் ஜெமினி மற்றும் வாணிஸ்ரீ ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கும். ஆனால் சரோஜாதேவி தனது மனதில் ஜெமினியை கணவராக எண்ணி வாழ்க்கை நடத்துவார். இந்த நிலையில் தான் திடீரென வாணிஸ்ரீ கால்கள் செயலிழந்து போக அவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு சரோஜாதேவிக்கு வரும்.

ஜெமினி – வாணிஸ்ரீ வீட்டில் வேலை செய்து கொண்டே எழுத்தாளராகவும் இருப்பார் சரோஜாதேவி. ஒரு முன்னணி இதழில் அவர் எழுதும் தொடர் கதை வாராவாரம் வெளிவரும்போது அந்த தொடரை படிக்க ஜெமினியின் வீட்டில் உள்ளவர்கள் போட்டி போடுவார்கள். ஆனால் அந்த தொடர்கதையை எழுதியது அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் சரோஜாதேவி தான் என்பது யாருக்கும் தெரியாது.

ஜெமினி கணேசன் வீட்டில் உள்ள எல்லோருமே அந்த தொடர்கதையை விரும்பி படிப்பார்கள். குறிப்பாக அந்த வீட்டில் குடும்ப நண்பரான நாகேஷ் அதை படிப்பார். நாகேஷ் அவ்வப்போது சரோஜாதேவி இடம் அந்த தொடர்க்தை குறித்து விவாதம் செய்வார். சரோஜாதேவி தான் அந்த தொடர்கதையின் எழுத்தாளர் என்பது அவருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்திற்க்கு பின்னால் இப்படி ஒரு பூகம்பம் இருக்கிறதா..

ஜெமினி கணேசனுடன் மனதளவில் குடும்பம் நடத்தும் சரோஜாதேவி தன்னுடைய வாழ்க்கை கதையை தான் அந்த தொடர் கதையில் எழுதி இருப்பார். இதை ஒரு கட்டத்தில் வாணிஸ்ரீ கண்டுபிடித்து விடுவார். தனது கணவரை ஒருதலையாக காதலித்து ஒருதலையாக மனைவியாகவும் அவர் மனதுக்குள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த பிறகு அவர் சரோஜாதேவியை கண்காணிக்க தொடங்கி விடுவார்.

இதனை அடுத்து அந்த தொடர் முடிவடையும் நிலை வரும்போது கிளைமாக்ஸ் என்ன என்பதை அறிய அந்த வீட்டில் உள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள். அப்போது சரோஜாதேவி ஒரு தனி அறையில் கிளைமாக்ஸ் எழுதிக் கொண்டிருக்கும் நிலையில் நாகேஷ் போன் செய்து அந்த தொடர் கதையின் கிளைமாக்ஸை எனக்கு மட்டும் முன்கூட்டியே சொல்லுங்கள் என்று கூறுவார்.

thamarai nenjam

சரோஜாதேவி தூக்க மாத்திரைகளை கையில் எடுத்து வைத்துக்கொண்டு அந்த கதையின் நாயகி ஒவ்வொரு மாத்திரையாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என நாகேஷ் இடம் போனில் கதை கூறுவார். ஒரு கட்டத்தில் சரோஜாதேவி தான் அந்த நாவலில் வரும் கேரக்டர் என்பதை நாகேஷ் கண்டுபிடித்து அவரை காப்பாற்றுவதற்காக சென்ற போது என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

நடிகையர் திலகம் சாவித்திரி… 19 மாதங்கள் கோமாவில்… உதவ ஆளின்றி தவித்த இறுதிக்காலம்…!!

இந்த படம் கடந்த 1968 ஆம் ஆண்டு வெளியாகி. மிகப்பெரிய வெற்றி பெற்றது. இரண்டே இரண்டு வீடுகள் செட் போட்டு மொத்த படத்தையும் ஒரு சில நாட்களில் பாலச்சந்தர் முடித்துவிட்டார். ஜெமினி கணேசன், சரோஜாதேவி, வாணிஸ்ரீ ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள் நாகேஷ் தன் பங்குக்கு நடிப்பை மெருகேற்றி இருப்பார்.

மேலும் உங்களுக்காக...