தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைக்க போகும் தளபதி விஜயின் “GOAT” திரைப்படம்… அப்படி என்ன ஸ்பெஷல்…?

Published:

இந்தியாவின் முக்கியமான நடிகர்களுள் ஒருவரும் தமிழ்நாட்டின் முக்கிய பிரபலங்களில் ஒருவர் நடிகர் விஜய். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

90களில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து 2000களில் சமூகத் சீர்திருத்த கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர் நடிகர் விஜய். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் மற்றும் சிறப்பான நடன கலைஞரும் ஆவார்.

ஒரு கட்டத்திற்கு மேல் விஜய் நடித்தாலே அந்த படம் ஹிட்டு தான் என்ற அளவுக்கு உயர்ந்தவர் நடிகர் விஜய். தற்போது உச்சகட்ட நட்சத்திரமாக சினிமாவில் இருந்த போதிலும் சினிமாவை உதறிவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்காக பணி செய்ய வேண்டி அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து ஆரம்ப கட்டமாக மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். ஏற்கனவே கமிட்டான படங்களை நடித்து கொடுத்து முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் விஜய்.

அப்படி விஜய் நடித்த படம் தான் ‘கோட்- தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ இது விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நடித்த கடைசி படம் ஆகும். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன் மற்றும் யுகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் விஜயின் 68 ஆவது படமான கோட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ஐ மேக்ஸ் வடிவங்களில் உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரைகளிலும் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையிட பட உள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நடிகரின் படம் அனைத்து திரைகளும் வெளியிடப்பட்டது என்ற சாதனையையும் பெருமையும் நடிகர் விஜய்யும் கோட் திரைப்படமும் பெற இருக்கிறது. எந்த நடிகரும் முறியடிக்காத சாதனையை நடிகர் விஜய் படைத்துள்ளார். சினிமாவில் அவர் உயர்ந்தது போலவே அரசியலிலும் அவர் ஜெயிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் உங்களுக்காக...