ரஜினியின் வேட்டையன் படத்தில் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் குறித்த மாஸ் அப்டேட்?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்பொழுது தலைவர் 170வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வீடியோ மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி திருவனந்தபுரம் பகுதியில் தொடங்கிய நிலையில் அதை தொடர்ந்து அடுத்தடுத்த படப்பிடிப்புகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது அதில் பலம் பெரும் நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார். இருவருக்கிடையே ஆன காட்சியில் அங்கு படமாக்கப்பட்டது. அதை தொடர்ந்து சென்னையில் கமிஷனர் ஆபீஸ் போன்ற செட்டுகள் போடப்பட்டு சில நாட்கள் இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மீண்டும் திருநெல்வேலி நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் இந்த மாதத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்புகள் முடிய உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. மேலும் படத்தின் கதைப்படி அவர் போலி என்கவுண்டர்களை அறியும் ஒரு சிறந்த காவல் அதிகாரியாக நடித்திருப்பார். மேலும் படத்தில் நடிகர் அமிதாபச்சன் போல என்கவுண்டர்கள் குறித்து விசாரிக்கும் படி போராடும் ஒரு சமூக நலவாதியாக நடித்திருப்பார். இந்த நிலையில் வேட்டையின் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மலையாள நடிகர் பகத் பாசில், துஷாரா விஜயன், பாகுபலி வில்லன் ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பாடல்களே இல்லாமல், வெறும் 14 நாட்களில் படமாக்கப்பட்ட சிவாஜியின் வித்தியாசமான திரைப்படம் என்ன தெரியுமா?

இந்த நிலையில் வேட்டையன் படத்தில் நடிக்கும் மற்றும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் ரஜினியின் மகனாக பகத் பாசில் நடிக்க இருப்பதாகவும் அவரின் மனைவியாக துஷாரா விஜயன் அடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பாகுபலி வில்லன் ராணா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி நடிப்பில் ரஜினி நடித்த இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் ராணாவின் கதாபாத்திரம் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த நடிகர் விநாயகத்தின் கதாபாத்திரத்தை போன்று கொடூர வில்லனாக இல்லாமல் சற்று மாறுபட்ட வில்லனாக அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனை எடுத்து வேட்டையன் திரைப்படம் விரைவாக முடியும் பட்சத்தில் அதைத் தொடர்ந்து படக்குழு புரமோஷன் வேலைகளில் ஈடுபட இருப்பதாகவும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.