விஜய் நண்பராக பல படங்களில் ஜொலித்த ஸ்ரீமன்.. அவர் அப்பா பத்தி தெரிஞ்ச தகவலால் சிலிர்த்து போன ரசிகர்கள்..

By Bala Siva

Published:

நடிகர் விஜய் நடித்த பல படங்களில் அவருக்கு நண்பராக நடித்துள்ளவர் நடிகர் ஸ்ரீமான். இவர் நிஜத்திலும் விஜய்யின் நண்பராக இருக்கும் நிலையில், அவரை பற்றிய தகவல் ஒன்று தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்றே சொல்லலாம்.

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ஸ்ரீமான் சிறுவயதிலேயே சில கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ’மௌன மொழி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

புதிய மன்னர்கள், பிரியம் ஆகிய படங்களில் நடித்த அவர், அஜித் நடித்த ’ராசி’ என்ற திரைப்படத்தில் தான் முக்கிய கேரக்டரில் நடித்தார். ஆனால் அவருக்கு மிகச் சிறந்த அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்று கொடுத்த படம் என்றால் அது விஜய் நடித்த ’லவ் டுடே’ தான். தொடர்ந்து விஜய்யுடன் அவர் நிலாவே வா, நெஞ்சினிலே,  பிரண்ட்ஸ்,  வசீகரா,  சுக்ரன்,  வில்லு,  சுறா, பைரவா, வாரிசு  போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

srimaan1

விஜய்யுடன் மட்டுமின்றி அஜித்துடன் அவர் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தீனா, ஏகன், பில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஆயுத எழுத்து, விஜயகாந்த் நடித்த அரசாங்கம்,  கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன்,  ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் அவரின் அண்ணனாக நடித்திருந்தார் ஸ்ரீமன்.

குறிப்பாக இந்த படத்தில் ஸ்ரீமன் நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தது.

srimaan2

கடந்த ஆண்டு வெளியான கோஷ்டி, தீர்க்கதரிசி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த ஸ்ரீமன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக அண்ணி, காமெடி ஜங்ஷன், பாண்டியன் ஸ்டோர்ஸ், கேள்வியின் நாயகனே ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

இன்னும் தமிழ் திரையுலகில் பிஸியான நடிகராக ஸ்ரீமன் இருக்கும் நிலையில், அவர் குடும்பத்தினரில் சிலர் கூட சினிமா பின்னணி உள்ளவர்கள் என்ற தகவல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. நடிகர் ஸ்ரீமன் ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவரது தந்தை  ஒரு பிரபல நடன இயக்குனர். அதுமட்டுமின்றி இவர் ஒரு சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். சொந்தமாக திரைப்பட நிறுவனத்தை தொடங்கி அவர் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 24 படங்களை தயாரித்துள்ளார். மேலும் ஸ்ரீமான் மாமா கேஎஸ் ரெட்டி என்பவர் பிரபல டான்சர். இவர் பல திரைப்படங்களுக்கு டான்ஸ் இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...