தளபதி 68ல் இளம் தோற்றத்தில் நடிகர் விஜய்…! அமெரிக்கா சென்றுள்ள படக்குழு

Published:

லோகேஷ் கனகராஜின் அசத்தலான இயக்கத்தில் விரைவில் வர உள்ள தளபதி விஜயின் 67வது படம் லியோ. இதற்கான ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படம் அக்.19, 2023ல் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் படத்தை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.

விஜயின் 68வது படத்தை இயக்க இருப்பவர் வெங்கட் பிரபு. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜயை ரொம்பவே இளமையாகக் காட்டப் போகிறார்களாம். இதற்காகப் படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர்.

Leo
Leo

நடிகை ஜோதிகா எப்போதும் தான் ஒரு சிறந்த நடிகை என்ற எண்ணத்திலேயே இருப்பார். இதனால் அவர் சந்திரமுகி 2, தளபதி 68படங்களைத் தவற விட்டு விட்டார்.

சைடு கேப்பில் நுழைந்து அந்த வாய்ப்புகளை இவரிடமிருந்து தட்டிப் பறித்தவர் ஆன்டி நடிகை. அவர் வேறு யாருமல்ல. ரீ என்ட்ரி மூலம் ஹிட் கொடுத்த விக்ரம், மாதவன் மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சிம்ரன். மீண்டும் இவர்கள் இணைவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

பல வருடங்களுக்கு முன்பு இவர்கள் இணைந்து நடித்த சூப்பர்ஹிட் படம் துள்ளாத மனமும் துள்ளும். மீண்டும் இவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில் இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இன்றைய ரசிகர்களின் மனங்களையும் துள்ளச் செய்யும் என்பது மட்டும் நிச்சயம்.

தளபதி 68 படம் பட்டையைக் கிளப்பும் என்றே தெரிகிறது. இந்தப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு. தெலுங்குப் பட தயாரிப்பாளர் கோபிசந்த் மலினேனியும் விஜயுடன் இணைந்து பணியாற்றுவர். படத்தின் முக்கிய வேடத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 2024ல் விஜயின் பிறந்த நாள் அன்று இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Vijay Simran
Vijay, Simran

இந்தப் படத்திற்காக வெங்கட்பிரபு விஜயிடம் ஒன்லைன் ஸ்டோரியை மட்டும் கூறியுள்ளார். இதைக் கேட்டதுமே விஜய் படத்தின் முழு ஸ்க்ரிப்டையும் படிக்க ஆர்வம் காட்டினார். முதலில் இந்தப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் அட்லீ இயக்குவதாக சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் வந்ததால் வெங்கட்பிரபு இயக்க உள்ளார்.

படத்தின் இசை அமைப்பாளர் அனிருத். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்க இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அதாவது இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் தளபதி விஜய் இணையும் முதல் படமும் இதுதான்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்திற்காக கமலை இளமையாகக் காட்ட அமெரிக்கா சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல ஜெயிலர் படத்தில் ரஜினியையும் இளமையாகக் காட்டி இருப்பார்கள். தற்போது இவர்களைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜயையும் இளமையாகக் காட்டப் போகிறார்கள். இதுதான் வழிவழியாக வரும் கொள்கையோ…?!

மேலும் உங்களுக்காக...