Ten Hours Review: சிபிராஜ்க்கு கம்பேக் கொடுத்திருக்கும் டென் ஹவர்ஸ் – விமர்சனம்!

சிபிராஜின் அப்பா சத்யராஜுக்கு ஒரு 24 மணி நேரம் படம் போல இந்த 10 மணி நேரம் (Ten hours) திரைப்படம் சிபிராஜுக்கு அமைந்திருக்கிறது எனக் கூட சொல்லலாம். மிகத் தத்துரூபமாக அழகாக நடித்திருக்கிறார்…

ten hours review

சிபிராஜின் அப்பா சத்யராஜுக்கு ஒரு 24 மணி நேரம் படம் போல இந்த 10 மணி நேரம் (Ten hours) திரைப்படம் சிபிராஜுக்கு அமைந்திருக்கிறது எனக் கூட சொல்லலாம்.

மிகத் தத்துரூபமாக அழகாக நடித்திருக்கிறார் சிபிராஜ். விரைப்பான இன்ஸ்பெக்டராக சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர இன்ஸ்பெக்டராக சிபிராஜ் இப்படத்தில் நடித்திருக்கிறார். ஒரு பெண் கடத்தப்படும் வழக்கை கண்டுபிடிக்க செல்லும் சிபிராஜ்க்கு, அந்த வழக்கை தவிர்த்து, அந்த கேஸ் வேறு பாதையில் செல்கிறது.

ஒரு ஆம்னி பஸ் கொலை நடக்கிறது. அந்த கொலையை கண்டுபிடிக்க ஆத்தூர் நகர இன்ஸ்பெக்டராக வரும் சிபிராஜ் செல்கிறார். ஆனால் அந்த கொலைக்கும் முதலில் காணாமல் போன பெண்ணுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அந்த தொடர்பை இறுதியில் தான் விவரிக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் இளையராஜா கலியபெருமாள் மிக அழகாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் இசை கே எஸ் சுந்தரமூர்த்தி என்பவர். இவர்தான் படத்தில் பாதியை தாங்கிப் பிடிக்கிறார். அதாவது அமைதியாக நகரும் காட்சிகளைக் கூட மிக வேகமாக அதிரடி பின்னணி இசை கொடுத்து படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்துகிறார்.

முதல் பாதி ஓரளவு வேகத்தில் நகர்கிறது. இரண்டாம் பாதியில் முதல் 15 நிமிடங்கள் சுமாராக நகர்கிறது. அதன் பிறகு படம் ஜெட் வேகம் எடுக்கிறது. படத்தின் வில்லன் யார் என்றே தெரியாத சூழ்நிலையில் இறுதியில் படத்தின் வில்லனாக வத்திக்குச்சி திரைப்படப்புகழ் திலீபன் நடித்திருக்கிறார். வில்லனாக அதகளம் செய்து இருக்கிறார்.

படத்தில் அந்த பஸ்ஸில் நடக்கும் கொலையை யார் செய்திருக்கிறார் என பார்க்க நமக்கு படபடப்பு இருந்து கொண்டே இருக்கிறது. படம் கொஞ்சம் விரைப்பாக ரொம்ப டெரராகவே செல்கிறது. படத்தில் காமெடி பாத்திரங்களாக வரும் விஜய் டிவி குரேசி மற்றும் பழைய ஜோக் தங்கதுரை இவர்களெல்லாம் இருந்தாலும் படத்தில் ஜோக் என்பதோ கலகலப்பு என்பதோ மருந்துக்கு கூட கிடையாது. படம் ரொம்ப டெரராகவே செல்கிறது.

படத்தின் திரைக்கதையால் சிலவற்றை சரி செய்து இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான், ஆம்னி பேருந்தில் அவ்வளவு பயணிகள் இருக்க அவ்வளவு பேரும் தூங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு கொலையை கொலை செய்பவர் சாதாரணமாக செய்வது போல காண்பிப்பது கொஞ்சம் மைனஸ் தான். இருந்தாலும் திரைக்கதையால் அந்த இடம் ஒன்றும் தெரியவில்லை அந்த இடத்தை இன்னும் கொஞ்சம் இயக்குனர் சரி செய்திருக்கலாம். ஏனென்றால் இயக்குனர் நிறைய புத்திசாலித்தனமாக காட்சிகளை யோசித்து இருக்கிறார், அப்படி யோசித்து விட்டு படத்தில் பேருந்தில் நடக்கும் கொலையை இன்னும் கொஞ்சம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியான காட்சி அமைப்புகளில் காட்டி இருக்கலாம்.