திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் என்பது விசித்திரமானவர்கள் என்பதும், ஒரு நடிகை ஒரு நடிகருக்கு அம்மாவும் மகளாகவும் நடித்திருப்பார் என்பதும் ஒரு விசித்திரமான உண்மை. அதேபோல் ஒரு நடிகர் அம்மா மற்றும் மகளுக்கு ஜோடியாகவும் நடித்திருப்பார்கள். இது போன்ற வினோதமான நிகழ்வு திரையுலகில் நடைபெறுவதுண்டு. அது குறித்து தற்போது பார்ப்போம்.
‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ருக்மணி. அவருடைய மகள் தான் நடிகை லட்சுமி. இவர் சிவாஜி கணேசனுடன் ஆனந்தக்கண்ணீர் உட்பட பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்திருப்பார். முதல் முதலாக தமிழ் சினிமாவில் அம்மா, மகள் இருவரும் சிவாஜி கணேசன் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்தார்கள் என்றால் அது ருக்மணி – லட்சுமி தான்.
புன்னகை நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர், சகோதரர்.. மரணப்படுக்கையில் கூட துரோகம்..!
அதேபோல் லட்சுமி மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த ’ராகவேந்தர்’, ’பொல்லாதவன்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் லட்சுமி ஜோடியாக நடித்திருப்பார். அதேபோல் ரஜினிகாந்த் நடித்த ’எஜமான்’ திரைப்படத்தில் லட்சுமி மகள் ஐஸ்வர்யா ஜோடியாக நடித்திருப்பார்.
அதேபோல் நடிகை சுஜாதா, கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்துள்ளார். ’கடல் மீன்கள்’ என்ற படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகவும் ’மங்கம்மா சபதம்’ என்ற படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.
அதேபோல் சுஜாதா, ரஜினிகாந்த் ஜோடியாகவும் அம்மாவாகவும் அண்ணியாகவும் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ’அவர்கள்’ என்ற படத்தில் நடித்த சுஜாதா, ‘துடிக்கும் கரங்கள்’ என்ற திரைப்படத்தில் அண்ணியாகவும் ’பாபா’ திரைப்படத்தில் அம்மாவாகவும் நடித்துள்ளார்.
திருமணமாகி குழந்தை பெற்ற பின் காதல்.. தற்கொலை முயற்சி.. என்ன நடந்தது அல்போன்சா வாழ்க்கையில்..?
அதேபோல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்த ஸ்ரீவித்யா, அதே கமல்ஹாசனுக்கு அம்மாவாக ’அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் நடித்திருப்பார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவி ’வசந்த மாளிகை’ படத்தில் சிவாஜியின் அண்ணன் மகளாக நடித்திருப்பார். ஆனால் அதே ஸ்ரீதேவி, சிவாஜிக்கு ஜோடியாக ’சந்திப்பு’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் நடிகை அம்பிகா ’வாழ்க்கை’ என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் சிவாஜி கணேசன் மகன் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை அம்பிகா ’வெள்ளை ராஜா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்துடன் அறிமுகம், விஜய்யுடன் 4 ஹிட் படங்கள்.. ஒரே ஒரு விபத்தில் காணாமல் போன நடிகை..!
அதேபோல் நடிகை ராதா, சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக ‘முதல் மரியாதை’ படத்தில் நடித்துள்ளார். ஆனால் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவுக்கு ஜோடியாக ’கைராசிக்காரன்’, ‘முத்து எங்கள் சொத்து’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.