புன்னகை நடிகை ஸ்ரீவித்யாவை ஏமாற்றிய கணவர், சகோதரர்.. மரணப்படுக்கையில் கூட துரோகம்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் புன்னகையை ரசிகர்கள் ரசித்தார்கள் என்றால் அது ஸ்ரீவித்யாவின் புன்னகையை தான். அந்த அளவுக்கு அவரது சிரிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அவர் தமிழ் மலையாள திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த அவரது சொந்த வாழ்க்கை கடைசிவரை சோகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அவரது கணவரே அவரை ஏமாற்றினார் என்றும் கடைசி காலத்தில் அவரது சகோதரரும் ஏமாற்றினார் என்றும் கூறப்படுகிறது.

திருமணமாகி குழந்தை பெற்ற பின் காதல்.. தற்கொலை முயற்சி.. என்ன நடந்தது அல்போன்சா வாழ்க்கையில்..?

தமிழ் திரை உலகில் சிவாஜி கணேசன் நடித்த ’திருவருட்செல்வர்’ என்ற திரைப்படத்தில் தான் நடிகை ஸ்ரீபிரியா அறிமுகமானார். அதன் பிறகு அவர் ஏராளமான திரைப் படங்களில் நடித்தாலும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது ’சொல்லத்தான் நினைக்கிறேன்’ மற்றும் ’அபூர்வ ராகங்கள்’ படங்கள் தான்.

srividhya2

கமல், ரஜினி ஆகிய இருவரும் நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் அவரது கேரக்டர் வித்தியாசமாக இருக்கும். ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் இருந்தது.

இதன் பிறகு அவர் ஏராளமான படங்களில் நாயகியாகவும் நடித்தார். கமல்ஹாசன் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் இருவரும் காதலிப்பதாக கூட கிசுகிசு எழுந்தது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் இருவரும் நட்புடன் பழகினர்.

அஜித்துடன் அறிமுகம், விஜய்யுடன் 4 ஹிட் படங்கள்.. ஒரே ஒரு விபத்தில் காணாமல் போன நடிகை..!

இந்த நிலையில்தான் மலையாள திரையுலகின் உதவி இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவருடன் ஸ்ரீவித்யாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஸ்ரீதிவ்யா திருமணத்திற்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தனது காதலரை அவர் பெற்றோரை மீறி மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாகவே இருக்க விரும்பினார். ஆனால் அவரது கணவருக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக மீண்டும் அவர் நடிக்க வந்தார். ஸ்ரீவித்யாவின் மேனேஜர் போலவே அவரது கணவர் செயல்பட்டார் என்றும் அவரது சம்பளம், கால்சீட் எல்லாவற்றையும் அவர் கவனித்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

ஆனால் ஸ்ரீவித்யாவுக்கு தெரியாமல் அவரது பணத்தை அவர் கையாடல் செய்ததாகவும் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் தனது பணத்தை தனது கணவர் முறைகேடு செய்கிறார் என்பதை கண்டுபிடித்தவுடன் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு விவாகரத்து பெற்றார். விவாகரத்து வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது என்பதும் இறுதியில் ஸ்ரீவித்யா பக்கம் தான் தீர்ப்பு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

srividhya1

விவாகரத்துக்கு பின்னர் அவர் மீண்டும் திரைப்படங்களில் அம்மா படங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக அவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு கொடுத்தது கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் திடீரென முதுகு தண்டுவட புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கமல்ஹாசன் ஒருவரை மட்டும் தான் அவர் பார்க்க அனுமதித்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் அதிகமான நிலையில் அவர் தனது சொத்துக்களை எல்லாம் தனது சகோதரர் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து கொடுத்தார். அந்த டிரஸ்ட் மூலம் நடன கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த டிரஸ்டை அவரது சகோதரர் சரியாக நடத்தவில்லை என்றும் அவரும் முறைகேடு செய்ததாகவும் கூறப்பட்டது.

படத் தலைப்புகளால் ஈர்த்து தமிழ்சினிமாவிற்கு புதிய பாதை போட்ட வித்தகன் இவர் தான்…!

தாலி கட்டிய கணவர் மற்றும் கூடப்பிறந்த சகோதரர் என அனைவரும் ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை பறிப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால் அவரது வாழ்க்கை கடைசிவரை சோகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு அவர் காலமானார். அவர் மண்ணில் இருந்து மறைந்தாலும் அவரது நடிப்பு இன்னும் ரசிகர்கள் மனதில் எப்போதும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews