தமன்னா இந்தி மற்றும் மராத்திப் படங்களில் நடித்திருந்தாலும், தென்னிந்திய சினிமாவில் உள்ள பெரும்பாலான மொழிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2005 ஆம் ஆண்டு தனது சினிமாப் பயணத்தினைத் துவக்கிய தமன்னா, தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
கொரோனா பாதிப்பால் சினிமா உட்பட பல தொழில்கள் நடைபெறவில்லை, அதனால் தமன்னா வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையிலும், ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்து வருகிறார்.

அவ்வப்போது அழகுக் குறிப்பு சொல்வது, உடற்பயிற்சிகள் ரீதியான வீடியோக்கள் போடுவது, கொரோனா விழிப்புணர்வு என இருந்துவருகிறார், அந்தவகையில் தற்போது தமன்னா லாக்டவுனால் போர் அடிப்பதாக புலம்பியுள்ளார்.
அவர் பேசியதாவது, “லாக்டவுனை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவு நாட்கள் வீட்டில் இருந்தது கிடையாது, ரொம்பவும் போர் அடிக்குது. எனக்கு இருக்க ஒரே ஆப்ஷன் ஆன்லைன் கிரிக்கெட், பிரி பயர், செஸ் கேம்தான்.
யாருக்கெல்லாம் போர் அடிக்கிறதோ, அவங்க என் கூட விளையாடலாம்.
ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, என்னுடைய ஸ்கோரை முந்திக் காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.