விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவுக்கு பதில் களமிறங்கும் டாப் நடிகை!

Published:

அஜித்குமார் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘துணிவு’ வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆகஸ்ட் 3-வது வாரத்தில் தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை துவங்க தயாராகி வருகிறார். பல காலதாமதங்களை சந்தித்த இப்படம் இறுதியாக மீண்டும் படப்பிடிப்பை துவங்கும் நிலைக்கு திரும்பியுள்ளது.

அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது என்பது எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.முதலில் ‘விடாமுயற்சி’ படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை அணுகியதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.

ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலுக்கான துடிப்பான நடனம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, நடிகை தமன்னா இப்போது டிரெண்டிங்கில் உள்ளார். மேலும் நடிகை த்ரிஷாவும் பல படங்களில் நடித்து கொண்டு இருப்பதாலும் அவருக்கு பதிலாக நடிகை தமன்னாவை இப்படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவேளை இது நடந்தால் தமன்னா 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணைய உள்ளார். இவர் இதற்கு முன்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘வீரம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. மீண்டும் அதே கூட்டணி அமையுமா என்று பொருந்திருந்து பார்க்கலாம்.

விடாமுயற்சி படத்துக்கு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் செட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...