ஜெயிலர் படத்தில் யாருக்கு என்ன கதாபாத்திரம்? அப்போ இவருக்கு படத்தில் ஒண்ணுமே இல்லையா?

Published:

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஷிவா ராஜ்குமார், டைகர் ஷெராஃப், சுனில் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாக உள்ள ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

படம் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘காவாலா’, ‘ஹும்’, ‘ஜூஜூபி’ படத்தின் பாடல்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லரும் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. படத்தின் ரன்டைம் 2 மணி 30 நிமிடங்கள் மற்றும் தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி ஜூலை 28ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் நடந்த ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘ஹும்’ பாடலில் இருந்து ‘சூப்பர் ஸ்டார்’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும், சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை எப்போதும் ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது என்றும் அவர் கூறினார். அவர் ஏன் நெல்சனுடன் பணியாற்ற முடிவு செய்தார் என்பதையும் வெளிப்படுத்தினார்.

இப்படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும், தெலுங்கு நடிகையாக தமன்னா நடிக்க இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. தமன்னா முக்கிய வேடத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் தெலுங்கு நடிகையாக நடித்திருப்பதால் ‘காவாலா’ பாடலும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பதை படக்குழுவினர் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும் உங்களுக்காக...