எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இவர்களின் படங்களுக்கு இணையாக ஒரு படத்தை இயக்கி மாபெரும் சாதனை படைத்தார் டி.ராஜேந்தர். அப்போது வரை அனைத்து படங்களுக்கும் இளையராஜா தான் இசை என்று இருந்த நிலையை மாற்றி தானே இசையமைத்து அதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் டி.ராஜேந்திர். தான் இயக்கிய ஒரு தலை ராகம் படத்தில் இவர் பெயரை போடாமல் வேறொருவரின் பெயரை போட்டு படம் வெளியிடப்படுகிறது.
அதனால் சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று அந்தப் படத்தை பார்க்கவே வேண்டாம் என்ற முடிவெடுத்தார் டி.ராஜேந்தர். அதன் பிறகு தன்னுடைய இரண்டாவது படமான வசந்த அழைப்புகள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் ஒவ்வொரு படியாக கால் எடுத்து வைத்து திரையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றார்.
டி.ராஜேந்தர் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அவருடைய அடுக்கு மொழி வசனம் தான். மேடையில் எப்பொழுது ஏறினாலும் எப்பொழுது பேச சொன்னாலும் அவருடைய ரைமிங் வார்த்தைகள் ரசிகர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும். அவர் ஒரு இயக்குனர் மட்டும் இல்லாமல் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார்.
நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் எழுத்தாளர். சகலகலா வல்லவன் என்ற பட்டம் டி.ராஜேந்தருக்கு தான் மிகப் பொருத்தமாக இருக்கும். இன்று உலக அளவில் மிகப்பெரிய ஆளுமையாக கலக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் டி.ராஜேந்தரிடம் கீபோர்டு வாசித்தவர் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
இந்த நிலையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஆன ஜுடோ ரத்தினம் டி.ராஜேந்தரை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது டி.ராஜேந்தரும் சத்யராஜும் ஒரு படத்தில் சண்டை காட்சிக்கு தயாராகிக் கொண்டு இருந்தார்களாம். அப்போது டி.ராஜேந்தரிடம் ஜுடோ ரத்தினம் எந்த மாதிரி சண்டை போட வேண்டும், எப்படி காட்சியில் நடிக்க வேண்டும் என்பதை மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாராம்.
அஜித் கூடவே ட்ராவல் பண்ணேன்.. ஆனா வரல.. விஜய் வந்து நின்னாரு.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!
ரெடி, ஆக்சன் என்ற சொன்னதும் டி.ராஜேந்தர் சத்யராஜின் வயிற்றில் ஓங்கி நாலு குத்து குத்தினாராம். அதற்கு சத்யராஜ் டி.ராஜேந்தரை பார்த்து “இப்பொழுது தானே அவர் எப்படி செய்ய வேண்டும் என்பதை நிதானமாக சொல்லிக் கொடுத்தார், இப்படி என்னை வயிற்றிலேயே குத்திட்டியே” என்று கோபத்துடன் கேட்டாராம். அதனால் இருவருக்கும் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நிறுத்தப்பட்டதாம். அதன் பிறகு தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதாம்.
மேலும் இன்னொரு சம்பவத்தையும் ஜுடோ ரத்தினம் கூறினார் .ஒரு சண்டைக் காட்சியில் ஜீப்பில் இருந்து கீழே ஜம்ப் பண்ணி குதிக்க வேண்டும். கீழே பெட் போட்டிருப்பார்கள். அதில் நேராக வந்து விழ வேண்டும். அந்த காட்சியில் டூப் ரெடி பண்ணி வைத்திருந்தார்களாம். ஆனால் டி.ராஜேந்தர் டூப் எல்லாம் வேண்டாம். நானே அந்தக் காட்சியில் நடிக்கிறேன். சரியாக அந்த பெட்டில் போய் கீழே விழுகிறேன், தயவுசெய்து டூப் வேண்டாம் என சொன்னாராம்.
ஆனால் ஜுடோ ரத்தினம் வேண்டாம் என்று எத்தனையோ தடவை சொன்னாராம். ஆனால் டி.ராஜேந்தர் கேட்கவே இல்லையாம். அவர் விருப்பப்படியே விட்டுவிட்டாராம் ஜுடோ ரத்தினம். காட்சி படமாக்கப்பட்டிருந்தபோது டி.ராஜேந்தர் மேலிருந்து கீழே தவறுதலாக குதித்து விட்டாராம். கால் பாதத்தில் நல்ல அடிப்பட்டு விட்டதாம். உடனே ஜூடோ ரத்தினம் டி.ராஜேந்தரை பார்த்து “நான் எத்தனை தடவை சொன்னேன்? இப்போ உன்னால படபிடிப்பும் போச்சு” என்று சொன்னாராம் .அதன் பிறகு அவர் கால் சரியாகும் வரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாம். இதை ஒரு பேட்டியில் ஜுடோரத்தினம் கூறினார்.