அஜித் கூடவே ட்ராவல் பண்ணேன்.. ஆனா வரல.. விஜய் வந்து நின்னாரு.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர்!

இன்று தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்ட நடிகர்களாக நடிகர் அஜித் மற்றும் விஜய் திகழ்கிறார்கள். இருவருக்கும் தொழில்முறையில் ஏகப்பட்ட போட்டிகள் இருப்பினும் மனதளவில் எந்தவித போட்டிகளும் பொறாமைகளும் இல்லாமல் நண்பர்களாகவே இருக்கிறார்கள்..

அஜித் கூடவே பல வருடங்களாக பயணித்து வந்த ரமேஷ் கண்ணா தன்னுடைய அனுபவங்களை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்து இருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் அஜித் உடன் இணைந்து நடித்த ரமேஷ் கண்ணா அஜித்தின் பண்புகளையும் அவருடைய திறமைகளையும் அந்த பேட்டியின் மூலம் விவரித்து இருக்கிறார்.

 

Ajith Ramesh Kanna

ரமேஷ் கண்ணா ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் உதவி இயக்குனராகவும் பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.அவர் முதன் முதலில் இயக்கிய படம் அஜித்தை வைத்து எடுத்த தொடரும் திரைப்படமாகும்.

அந்தப் படத்தில் நடிக்கும் போது அஜித் எந்த அளவுக்கு தனக்கு உதவி கரமாக இருந்தார் என்பதையும் கூறியிருக்கிறார். ஆனால் அந்த பேட்டியில் மேலும் கூறிய ரமேஷ் கண்ணா அஜித்தை பற்றி ஒரே ஒரு விஷயத்தை தனது ஆதங்கமாக வெளிப்படுத்தினார்.

திடீரென நின்று போன கார்த்திக்கின் படம்.. மனோபாலாவை இயக்கச் சொன்ன தயாரிப்பாளர்.. அதுக்கு என்ன சொன்னார் தெரியுமா?

அதாவது விஜயுடன் ரமேஷ் கண்ணா நடித்த ஒரே ஒரு திரைப்படம் பிரண்ட்ஸ் திரைப்படமாகும். ஆனால் அஜித்துடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

Vijay Ramesh Kanna

இதைப் பற்றி குறிப்பிட்டு பேசிய ரமேஷ் கண்ணா விஜய்யுடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறேன். என்னுடைய மூத்த பையன் திருமணத்திற்கு விஜய் வந்து நின்னாரு ஆனால் அஜித்துடன் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன், ஆனா அவர் வரவில்லை என்று தனது ஆதங்கத்தை கூறினார்.

ஒழுங்கா கூட கதை கேட்க மாட்டாரு.. அஜித்தை பற்றிய ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் இயக்குனர்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...