மீண்டும் இணைகிறதா ‘சிங்கம்’ கூட்டணி? ஆரம்பிக்கப்பட இருக்கும் ‘அருவா’

Published:

சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி, மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென சூர்யா மற்றும் ஹரி இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்த ’வணங்கான்’ என்ற திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடுத்து தற்போது மீண்டும் சூர்யா மற்றும் ஹரி இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

surya hariசூர்யா நடிப்பில் ஹரி இயக்குவதாக இருந்த ‘அருவா’திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஏற்கனவே ராஷி கண்ணா நாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் ஹரியுடன் இணைய சூர்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது ‘சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வாடிவாசல் முடிந்தது அவர் ‘அருவா’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...