சூரி ஹோட்டலுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல! மதுரை அரசு மருத்துவமனையில் நடப்பதே வேற

Published:

மதுரையின் பல இடங்களில் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்கள் பல கிளைகளாக செயல்பட்டு வருகின்றது. அம்மன் ஹோட்டல் என்ற பெயரில் கம்மியான விலையில் மக்களுக்கு தரமான உணவுகளை அளித்து வருவது தான் சூரியன் நோக்கம். அதன்படி மதுரையில் இருக்கும் தெப்பக்குளம், ஒத்தக்கடை, கரிமேடு, கடச்சநேந்தல், ஊமச்சிகுளம் போன்ற பகுதிகளில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சூரியின் அம்மன் ஹோட்டலால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அந்த அரசு மருத்துவமனையில் சூரியின் அம்மன் உணவகமும் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் அங்கு வரும் மக்களுக்கு மிகவும் கம்மியான விலையில் சாப்பாடுகளை இந்த ஹோட்டல் நிர்வாகம் கொடுத்து வருகிறது.

அதே மருத்துவமனையில் ஒரு என்ஜிஓவும் செயல்பட்டு வருகிறது. கடந்த 170 நாள்களாக அந்த என்.ஜி.ஓவும் மக்களுக்கு சாப்பாடுகளை கொடுத்து வருகின்றது. ஆனால் திடீரென அந்த என்.ஜி.ஓ நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு  காரணம் சூரியின் ஹோட்டல்  நிர்வாகத்தினர்தான் என்று கடந்த மூன்று நாள்களாக சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பதை விளக்கும் வகையில் சூரியின் ஹோட்டல் நிர்வாகத்தினர் விளக்கமளித்திருக்கின்றனர். அதாவது எந்த என்.ஜி.ஓவை நிறுத்தியதே அரசு மருத்துவமனையின் மேனேஜ்மெண்ட்தான் என்று அந்த நிர்வாகத்தினர் கூறியிருக்கிறார்கள்.

ஏனென்றால் கொல்கத்தாவில் அரசு மருத்துவர் கொல்லப்பட்ட விஷயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  அது நடந்ததே ஒரு வெளியாள் மூலமாகத்தான் என எல்லோருக்கும் தெரியும். அதிலிருந்தே அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பல விஷயங்களை செய்து வருகிறது.

அதில் வெளியிலிருந்து அதுவும்  யாருக்கும் தெரியாத ஒரு மூன்றாவது நபர் யாரையும் உள்ளே விட அனுமதிக்கக் கூடாது என்றும் பல பாதுகாப்புகளை மருத்துவமனை நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. அதனால் தான் அந்த என்.ஜி.ஓவை இனிமேல் உணவை வழங்க வேண்டாம் என அரசு மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருப்பதாக தெரிகிறது.

அதனால் இதுக்கும் சூரி ஹோட்டலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அப்படியே அந்த என்.ஜி.ஒ உணவை வழங்க வேண்டும் என்று நினைத்தால் அதுக்கு என தனி ப்ரோட்டாகால்ஸ் இருக்கிறது. அதை ஃபாலோ செய்து அவர்கள் உணவை வழங்கலாம். அதில் எங்களுக்கு ஒன்றும் எந்தவித பாதிப்பும் வந்துவிட போவதில்லை.

அதை நாங்கள் வரவேற்கத்தான் செய்கிறோம். ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. மற்றபடி இந்த பிரச்சினைக்கும் சூரிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மேலும் இதை நாங்கள் பிசினஸ் என்ற வகையில் செய்யவில்லை. ஒரு சேவை மனப்பான்மையில்தான் செய்து வருகிறோம் என சூரியின் ஹோட்டல் நிர்வாக்த்தினர் கூறி வருகிறார்கள்.

மேலும் உங்களுக்காக...