இவருதான் உன் படத்தோட ஹீரோவா? கேள்வி கேட்ட அக்கா.. கேளடி கண்மணியில் எஸ்.பி.பி ஹீரோவான நிகழ்வு

Published:

அதுவரை யாரும் எஸ்.பி.பி-க்கு பாடகர் திறமையைத் தாண்டி மற்றுமெரு பரிணாமம் உள்ளது என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இயக்குநரின் கண்களுக்குத் தான் இவர்களை இப்படியும் பயன்படுத்தலாம் என எண்ணி சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பார்கள். அப்படி பாடகர் எஸ்.பி.பி.-க்கு உருவான ஒரு படம் தான் கேளடி கண்மணி.

இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் இருந்து சினிமாவைக் கற்று கேளடி கண்மணி படத்தின் மூலம் முதன் முதலாக இயக்குநராகி தனது முதல்படத்திலேயே சூப்பர் கதையுடன் வந்து மாபெரும் வெற்றிப் படத்தினைக் கொடுத்தவர். கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் சில காட்சிகளே வந்திருக்கும் எஸ்.பி.பி-யை கவனித்திருக்கிறார் அப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த இயக்குநர் வசந்த். அந்தப் படத்தில் எஸ்.பி.பி-யிடம் நல்ல பாடகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து தனது முதல் படமான கேளடி கண்மணி படத்தில் நடிக்க வைக்கிறார்.

விஜய் சொல்லியும் கேட்காத வெங்கட்பிரபு.. ஆர்வக்கோளாறில் செய்யப் போய் என்னாச்சு தெரியுமா?

இப்படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது அக்காவிடம் காட்டியிருக்கிறார் இயக்குநர் வசந்த். அருமையாக இருக்கிறது இந்தப் படத்தின் ஹீரோ யார் என்று கேட்டிருக்கிறார். எஸ்.பி.பி.தான் ஹீரோ என்றதும் எப்படிடா.. அவருக்குப் பாடல் ஓகே அவர் ஹீரோவாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது வேறு கதாபாத்திரங்களைக் கொடுத்திருக்கலாமே என்று கேட்க, உறுதியுடன் எஸ்.பி.பி.தான் ஹீரோ என்று கூறிவிட்டு படத்தினை முடித்திருக்கிறார்.

1990-ம் ஆண்டில் படம் வெளியாகி 200 நாட்களைக் கடந்து ஓடியிருக்கிறது. இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக கற்பூர பொம்மை ஒன்று.., மண்ணில் இந்த காதலன்றி போன்ற பாடல்கள் இன்றும் சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது வாழை படத்தினை கொண்டாடும் நாம் தன்னுடைய கதையை மட்டுமே நம்பி பாடகராக புகழ் பெற்று விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை ஹீரோவாக்கி உருக வைக்கும் நடிப்பை அவரிடம் இருந்து வாங்கி அவருக்குள் இருந்த நடிப்புத் திறமையையும் வெளிக்கொணர்ந்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் வசந்த்.

 

மேலும் உங்களுக்காக...