எழுத்தாளர் சுஜாதாவின் இத்தனை நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறதா? ரஜினி, கமல் நடித்த அனுபவங்கள்..!

By Bala Siva

Published:

எழுத்தாளர் சுஜாதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி உள்ளார் என்பதும் அவரது நாவல்களுக்கு வாசகர்கள் பலர் அடிமையாக இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

சுஜாதா, பாலகுமாரன் ஆகிய இருவரும் தமிழ் எழுத்து உலகில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இருவரது எழுத்துக்களுக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் இருந்தார்கள். அந்த வகையில் ஒரு கட்டத்தில் இருவருமே சினிமாவிலும் கவனம் செலுத்தினர்.

ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள் சில திரைப்படமாக உருவாகியது. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம். சுஜாதாவின் ‘காயத்ரி’ என்ற நாவல்தான் முதல் முதலாக திரைப்படமானது. ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி, ராஜசுலோசனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் திரைக்கதையில், இளையராஜா இசையில் பட்டாபிராமன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

priya

இதனை அடுத்து சுஜாதாவின் ‘ப்ரியா’ என்ற நாவல் அதே பெயரில் படமாகியது. இதிலும் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலில் சாதனை செய்தது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்.

இதனையடுத்து ‘யாருக்கு யார் காவல்’, ‘பொய் முகங்கள்’ ஆகிய சுஜாதாவின் நாவல்களும் படமாகின. குமுதம் இதழில் சுஜாதா எழுதிய தொடர் ஒன்று திரைப்படமானது. அதுதான் ‘விக்ரம்’. கமல்ஹாசன் நடிப்பில், சுஜாதா கதை வசனத்தில் உருவான இந்த படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இதன் பிறகு சுஜாதாவின் ‘ஆனந்த தாண்டவம்’ என்ற நாவல் அதே பெயரில் திரைப்படமானது. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதுவரை கிளாமராக நடித்துக் கொண்டிருந்த தமன்னா இந்த படத்தில் தான் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது.

thiruda

இதுபோக சுஜாதா பல திரைப்படங்களுக்கு வசனம் மட்டும் எழுதியுள்ளார். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நாடோடி தென்றல்’, ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘உயிரே’ உள்பட பல படங்களுக்கு சுஜாதா வசனம் எழுதியுள்ளார். ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘இந்தியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

சுஜாதா எழுத்துலகில் சாதித்த அளவுக்கு சினிமாவில் சாதிக்கவில்லை என்றாலும் அவரது ஒரு சில படங்கள் மறக்க முடியாத படங்களாக அமைந்தது. பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

கமல்ஹாசன் – சிங்கீதம் சீனிவாசராவ் கூட்டணியில் உருவான 6 படங்கள்.. எத்தனை சூப்பர்ஹிட்?

சுஜாதாவை திரையுலகம் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்படுவது உண்டு. அவருடைய திறமையை முழுதாக நம்பி தங்கள் படங்களில் அவரை ஷங்கர், மணிரத்னம் போன்ற சில இயக்குனர்களே பயன்படுத்திக் கொண்டனர். இருப்பினும் அவரது பல படங்கள் காலத்தால் அழியாத வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...