சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார் என்பது தெரிந்துள்ளது.
இந்த நிலையில், தமிழில் இது அவருக்கு முதல் படம் என்பதால், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிந்த பிறகு தான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழில் பேசுவது தனக்கு சிரமமாக இருக்கும் என நினைத்த நிலையில், அவரது கதாபாத்திரத்தையே தெலுங்கு பேசும் பெண்ணாக இயக்குநர் சுதா கொங்கரா மாற்றி விட்டதால், அவருக்கு நடிப்பது மிகவும் எளிதாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் ஸ்ரீலீலா நடித்து வருவதால், அவரது கால்ஷீட்டை பெறுவது கடினமான சூழ்நிலையாக உள்ளது. இதனால், அவர் ஒதுக்கிய கால்ஷீட்டை மிகவும் கவனமாக சுதா பயன்படுத்தி வருகிறார். அவரது கால்ஷீட்டில் ஒரு மணி நேரம் கூட வீணடிக்காமல், மிகச் சிறப்பாக அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், கிட்டத்தட்ட அவரது காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீலீலா இணைந்து நடிக்கும் இப்படம், தமிழில் அவரது முதல் படம் என்பதால், இது ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.