ரஜினி படத்திற்கு இசையமைத்த எஸ்பிபி.. இளையராஜாவுக்கு கோபமா?

By Bala Siva

Published:

பாடகர் எஸ்பிபி சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் அதுவும் ரஜினி படத்திற்கே அவர் இசை அமைத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ரஜினிகாந்த் நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எஸ்பிபி தான்.

ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1983-ம் ஆண்டு, மார்ச் 4-ம் தேதி வெளியானது. ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் இந்த படத்திற்கு நடித்திருந்தனர். இந்த படத்திற்கு முதலில் இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டிருக்கிறதாகவும், ஆனால் திடீரென எஸ்பிபி இந்த படத்துக்கு இசையமைத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இளையராஜாவுக்கு எஸ்பிபி மீது மன வருத்தம் என்றும் கூறப்பட்டது.

இளையராஜாவுக்கு போட்டியாக வந்த 2 இசையமைப்பாளர்கள்.. இருவருமே ஆஸ்கர் பெற்ற அதிசயம்..!

இந்த படத்தில் விஜயகுமார் மற்றும் ரஜினிகாந்த் அண்ணன் தம்பியாகவும், விஜயகுமார் ஜோடியாக சுஜாதா, ரஜினிகாந்த் ஜோடியாக ராதாவும் நடித்திருப்பார்கள். விஜயகுமாரை எஸ்டேட் முதலாளி ஜெய்சங்கர் கொன்றுவிட அவரை ரஜினி பழி வாங்குவதுதான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் சூப்பராக இருக்கும் என்பதும் மிக அதி வேகமாக ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற எஸ்பிபியின் 6 பாடல்களுமே நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமின்றி அவரே அனைத்து பாடல்களையும் பாடி உள்ளார்.

புது முகங்களை வைத்து பல திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்ற ஸ்ரீதர் சரிவான நிலையில் இருந்தபோது தான் ‘துடிக்கும் கரங்கள்’ படத்தை ஸ்ரீதர் இயக்கினார். தன்னாலும் ஒரு கமர்சியல் படத்தை இயக்க முடியும் என மீண்டும் ‘துடிக்கும் கரங்கள்’ மூலம் அவர் நிரூபித்தார்.

விஜயகாந்த்தின் 2வது படம்.. ஷோபாவுடன் நடித்த ஒரே படம்.. இளையராஜாவால் ஜொலித்த அகல் விளக்கு..!

இந்த படம் தமிழகத்தில் உள்ள பல நகரங்களில் 100 நாட்கள் ஓடி சாதனை செய்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஊட்டியில் நடந்தது. ரஜினியிடம் 20 நாட்கள் மட்டுமே கால்சீட் வாங்கி இருந்ததால் மொத்த படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஸ்ரீதர் முடித்தார் என்றும் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்து மேக்கப் போட்டு ரஜினி தயாராகி விடுவார் என்றும் ஸ்ரீதர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ரஜினி கொடுத்த 20 நாட்களில் மிகச் சரியாக அவரது காட்சிகளை எடுத்து முடித்த ஸ்ரீதர் அதன் பிறகு மற்ற காட்சிகளை 10 நாட்களில் எடுத்து 30 நாட்களில் இந்த படம் எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து ஸ்ரீதர் படம் இயக்கவில்லை என்றாலும் கமல்ஹாசனை வைத்து ‘நானும் ஒரு தொழிலாளி’ என்ற படத்தை இயக்கினார். அதேபோல் மோகன் நடித்த ‘தென்றலே என்னை தொடு’ என்ற படமும் சூப்பர் ஹிட் ஆகியது.

இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..!

ஸ்ரீதர் இயக்கத்தில் மறக்க முடியாத ஒரு ஆக்சன் படம் என்றால் அதில் நிச்சயமாக துடிக்கும் கரங்கள் படமும் இருக்கும்.