விஜயகாந்த்தின் 2வது படம்.. ஷோபாவுடன் நடித்த ஒரே படம்.. இளையராஜாவால் ஜொலித்த அகல் விளக்கு..!

விஜயகாந்த் நடித்த முதல் படம் இனிக்கும் இளமை என்பது பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவரது இரண்டாவது படம் குறித்து விஜயகாந்த் ரசிகர்கள் பலருக்கும்  தெரிந்திருக்காது. மேலும் விஜயகாந்தின் இரண்டாவது படத்தின் நாயகி ஷோபா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். அந்த படம் தான் அகல் விளக்கு.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பல திரைப்படங்களுக்கு கதை எழுதிய ஆர் செல்வராஜ் தான் இந்த படத்தை இயக்கியனார். இந்த படம் கடந்த 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி வெளியானது. இந்த படம் ஓரளவு வெற்றியடைய காரணம் இந்த படத்தில் இடம்பெற்ற இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான்.

ஏதோ நினைவுகள்.. கனவுகள்.. மனதில் வளருதே.. என்ற பாடல் இன்று கேட்டாலும் சொக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். இந்த பாடலை கே ஜே ஜேசுதாஸ், சைலஜா பாடினர். கங்கை அமரன் பாடலை எழுதியிருந்தார். விஜயகாந்த் இந்த படத்தில் தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் ஒரு கேரக்டரிலும், அதன் பின்னர் ஒரு அரசியல்வாதியாகவும் நடித்திருப்பார்.

எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. 400 படங்களுக்கும் மேல் நடித்த டைப்பிஸ்ட் கோபு ..!

இந்த படத்தில் ஷோபா ஒரு அனாதையாக அத்தை மாமாவின் அரவணைப்பில் இருப்பார். அவர் தனது குடும்பத்தினரின் வறுமையை போக்குவதற்காக மருத்துவமனை அருகே ஒரு இட்லி கடை வைத்திருப்பார். அந்த இட்லி கடைக்கு அந்த மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவர் வழக்கமான வாடிக்கையாளராக இருப்பார்.

இந்த நிலையில் தான் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த் ஷோபாவை சந்திப்பார். இருவருக்கும் இடையே காதல் ஏற்படும். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் ஷோபாவின் அத்தை மாமா இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

இந்த நிலையில் திருமணம் ஆன பின்னரும் தொழிலாளர்களின் உரிமைக்காக விஜயகாந்த் போராடிக் கொண்டிருப்பதால் குடும்பத்தில் மீண்டும் வறுமை ஏற்படும். இதனை அடுத்து மீண்டும் ஷோபா இட்லி கடையை போட்டு இருப்பார்.

விஜயகாந்த் நடித்த முதல் படமே ஏ சர்டிபிகேட்.. இனிக்கும் இளமையின் மோசமான விமர்சனம்..!!

இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் வளர்ந்து ஒரு கட்டத்தில் மேயர் ஆகிவிடுவார் விஜயகாந்த். ஆனால் ஷோபாவின் அத்தையும் மாமாவும் விஜயகாந்த் பெயரை சொல்லி சில ஊழல்களை செய்வார்கள். ஆனால் அந்த ஊழல்களை எல்லாம் ஷோபா தான் செய்தார் என்று ஒரு கட்டத்தில் மாட்டிவிட்டு விடுவார்கள்.

இதனால் அதிர்ச்சி அடையும் விஜயகாந்த் ஷோபாவை விட்டு பிரிந்து விடுவார். இதனால் வருத்தத்தில் இருக்கும் ஷோபாவுக்கு டாக்டர் ஆறுதல் கூறியதோடு இருவரும் சேர்ந்து ஷோபாவின் அத்தை மாமா தான் இந்த ஊழலை செய்தார்கள் என்று விஜயகாந்துக்கு புரிய வைப்பார்கள். அதன் பிறகு இருவரும் இணைந்து விடுவது போன்ற கதை அமைக்கப்பட்டு இருக்கும்.

பாரதிராஜாவின் என் உயிர் தோழன்.. பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

ஆர் செல்வராஜ் இந்த படத்தை மிகவும் அருமையாக இயக்கி இருந்தார். விஜயகாந்தின் முதல் திரைப்படமான இனிக்கும் இளமை மிகப் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது திரைப்படமான அகல் விளக்கு வசூல் அளவில் அவருக்கு கை கொடுத்தது. விஜயகாந்த் மற்றும் ஷோபா இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்ற பெருமை இந்த படத்திற்கு மட்டுமே கிடைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...