கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் எப்போதும் சண்டை, சச்சரவு என பல சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் இந்த வாரம் மிக எமோஷனலாகவும் ஒருவித குடும்ப பிணைப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்த வாரம் நடைபெற்று வரும் ஃப்ரீஸ் டாஸ்க் (Freeze Task) இருந்து வருகிறது.
பல நாட்களாக போட்டியாளர்கள் குடும்பத்தினரை பிரிந்து இருக்கும் போது திடீரென அவர்களது வரவே நிச்சயம் மிகப்பெரிய ஒரு தெம்பாக தான் அமையும். மிகவும் சிறப்பாக ஆடிக் கொண்டிருப்பவர்கள் திடீரென ஒரு கட்டத்தில் உடைந்து போகும் போது அவர்களுக்கு ஆதரவாக குடும்பத்தினர் வந்து உதவியதை கொடுப்பது நிச்சயம் வரும் நாட்களில் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவும் உதவி செய்யலாம்.
இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு 20 நாட்கள் கூட இல்லை என்று தெரியும் நிலையில் இந்த ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் குடும்பத்தினர் வருவது அனைத்து போட்டியாளர்களுக்குமே முன்னோக்கி நகர சிறந்த வாய்ப்பாக அமையலாம். அந்த வகையில் தீபக், மஞ்சரி, ரயான், ராணவ், பவித்ரா, விஜே விஷால் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருந்தனர்.
என் மகள் தான் முரண்பாடே..
இதில் மஞ்சரியின் பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபோது அவர்கள் சௌந்தர்யா பற்றி பேசுகையில் மஞ்சரி மற்றும் ஜாக்குலின் ஆகியோர் நடிப்பதாக குறிப்பிட்டது தவறு என்றும் தெரிவித்திருந்தனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவருமே சிறந்த தோழிகளாக இருந்தனர். தற்போதும் ஜாக்குலின் அப்படி இருந்துவரும் நிலையில் சௌந்தர்யா இப்படி தன்னை பற்றி பேசிவிட்டார் என தெரிந்ததும் வருத்தத்தில் அவர் கண்ணீர் வடிக்கவும் செய்திருந்தார்.
மேலும் பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினர் வரும்போது அந்த வீட்டிற்குள் முரண்பாடான நபர் யார் என்று கேள்வியும் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சௌந்தர்யாவின் பெற்றோர்கள் வந்திருந்த போது அவரது தந்தை, “எனது மகள் தான் இங்கு முரண்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவள் தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்” என தெரிவித்தார்.
ஜாக்குலின் பத்தி அப்டி பேசாத..
இதனைத் தொடர்ந்து சவுந்தர்யாவிடம் தனியாக பேசும் அவரது தாய், “நீ நல்லா விளையாடுறே. ஆனா ப்ரண்ட்ஸ் பின்னாடி பேசாத. உனக்கு ஜாக்குலின்கிட்ட எதுவும் சொல்லணும்னு தோணுனா அதை அவகிட்டயே போய் சொல்லு. பின்னாடி பேசுறது தப்பு. ஜாக்குலினும் நல்லா ஆடுறா. நீயும் நல்லா தான் ஆடுறே. தேவை இல்லாம கத்துறதும் தப்பு தான்” என தெரிவிக்கிறார்.
அதே போல சவுந்தர்யாவின் தாயார், கிளம்பும் நேரத்தில் தனது மகளையும் ஜாக்குலினையும் சேர்த்து நிறுத்தி நட்பாக இருக்கும்படியும் அறிவுறுத்ததி செல்கிறார்.