பிக் பாஸ் 8: ‘ஆரம்பிச்சுட்டான்’.. ‘சரி விடும்மா’.. வாயை கொடுத்து சவுந்தர்யாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட அருண்..

By Ajith V

Published:

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்திய டாஸ்க் ஒன்றில் சவுந்தர்யா பற்றி அருண் பிரசாத் சில வார்த்தைகளை கூற அதற்கு அவர் பதிலடி கொடுத்த விஷயம் அதிக கவனத்தை பெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் கொண்டாடப்பட்டிருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் சாப்பாடு, எண்ணெய் தேய்த்து குளித்தால் தொடர்பாக அனைத்து விஷயங்களும் பிக் பாஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தீபாவளி கொண்டாட்டத்தால் திருவிழா கோலம் பூண்டிருந்த பிக் பாஸ் வீட்டில் நடிகர் கவின் சமீபத்தில் நுழைந்து அனைவரிடமும் சிறப்பாக கலந்துரையாடி இருந்தார். இவர் முந்தைய பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் சென்றதற்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பரிசை கொடுத்திருந்தனர். வழக்கமாக பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை, சச்சரவு என பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், தீபாவளி கொண்டாட்டம் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்திருந்தது.

இதன் பின்னர் மீண்டும் டாஸ்க்குகள் என பரபரப்பாக இயங்க தொடங்கிய நிலையில் தான் சமீபத்தில் அருண் பிரசாத்தை பார்த்து சில கருத்துக்களை சௌந்தர்யா கூறியுள்ளார். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்கள் மத்தியில் நமத்து போன பட்டாசு யார், டமால் டுமீல் பட்டாசு யார் என்பதை ஒவ்வொருவரும் தெரிவிக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தது.

அதாவது எந்த பிரச்சனை வந்தாலும் துணிச்சலாக கேள்வி கேட்கும் நபர் டமால் டுமீல் பட்டாசு என்றும் அமைதியாக இருப்பவர் நமத்து போன பட்டாசு என்றும் குறிப்பிட வேண்டும். அதன்படி அருண் பிரசாத், ஜாக்குலினை டமால் டுமீல் பட்டாசு என கூறியதுடன் சௌந்தர்யாவை நமத்து போன பட்டாசு என்றும் கூறியிருந்தார். தன்னை அப்படி கூறியதற்கான விளக்கத்தையும் சௌந்தர்யா கேட்க, இதற்கு பதில் சொன்ன அருண் பிரசாத், ஒரு சில டாஸ்க்குகளைத் தவிர சண்டை என வரும்போது மிக அமைதியாக இருந்ததாகவும் சௌந்தர்யாவிடம் இதுவரைக்கும் எந்த துணிச்சலான விஷயத்தையும் பார்க்கவில்லை என்றும் கூறுகிறார்.

தன்னை நமத்து போன பட்டாசு என அருண் கூறியதும் சற்று விரக்தி அடைந்த சௌந்தர்யா, இதற்குப் பின்னர் அவரிடம் தான் எப்படி நமத்து போன பட்டாசு ஆனேன் என்றும் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் அருண் பிரசாத், ஆரம்பத்தில் உள்ள சில நாட்களில் பெரிதாக சௌந்தர்யா சிறப்பாக ஆடவில்லை என்று கூறுகிறார் இதற்கு பதிலடி கொடுக்கும் சௌந்தர்யா, “இந்த வாரத்துக்கு தானடா கேட்டாங்க. ஆரம்பிச்சுட்டான், முதல் வாரத்தில் இப்படித்தான், அப்படின்னு” என்று கூறுகிறார்

இதன் பின்னர் பேசும் அருண் பிரசாத் நீ வேண்டுமானால் எனது பெயரை எப்போது கேட்டாலும் சொல் என்றும் கூறுகிறார். இந்த சம்பவம் பிக் பாஸ் வீட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.