சீரியல் பாக்கியாவிற்கு மட்டும் இவ்வளவு சம்பளமா? அதிரவைக்கும் அப்டேட் இதோ!

சின்னத்திரை சீரியல்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த அளவுக்கு வேற லெவலில் தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பல சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சன்…

baakiyalakshmi 7

சின்னத்திரை சீரியல்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அந்த அளவுக்கு வேற லெவலில் தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பல சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் எதிர்நீச்சல் ஒரு பக்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வந்தாலும் அதற்கு போட்டி போட்டுக்கொண்டு மற்றொரு பக்கம் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் வேற லெவலில் வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறது.

இந்த வெற்றிக்கு காரணம் கண்டிப்பாக பாக்கியலட்சுமி கதாபாத்திரம் தான். தற்போழுது இந்த நாடகத்தை மறுபடியும் தூக்கி நிறுத்துவதற்காக வந்திருபவர்தான் ரஞ்சித். இவர் வந்ததிலிருந்து இந்த நாடகத்தின் வேகம் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

நாளுக்கு நாள் எப்படி இருக்கப்போகிறது, இன்னைக்கு என்ன நடக்கப்போகிறது என்கிற மாதிரியான எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இந்த ஒரு சீரியல் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிக்கின்ற ஆர்டிஸ்ட் எல்லாருக்குமே ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்ற தகவல்கள் தற்போழுது கிடைத்துள்ளது.

முதலில் இந்த சீரியலோட பலமாக இருக்கும் பாக்கியாவுக்கு 15,000 சம்பளம் வழங்கப்படுகிறது. அடுத்ததாக சீரியலுடைய கதாநாயகன் கோபிக்கு ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் ராதிகாவின் சம்பளமும் 12000 தான்.

அடுத்ததாக பாக்கியாவின் மகன்களான செழியன் மற்றும் எழிலுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. நல்ல மருமகளாக இருந்து வரும் ஜெனிக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆன்மிகத்தில் மூழ்கிய சாய் பல்லவி! அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரை!

பாக்கியாவின் மகள் இனியாவுக்கு 8000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் பழனிச்சாமியாக நடித்துவரும் ரஞ்சித் அவர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது. இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 30,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திரையில் இவர் ஒரு முக்கிய நடிகர் என்பதால் இவருக்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது.