சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் பிரபலமாக வலம் வரும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள்!

Published:

சின்னத்திரையில் நடிக்கும் பலருக்கு தான் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் இணைந்தும் நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும் நிலையில் சின்னத்திரையில்  மூலம் பிரபலமடைந்து ஹீரோவாக ஹீரோயினாக மாறும் வாய்ப்பு சிலருக்கு தான் அமைந்துள்ளது.

அந்த வகையில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடித்து புகழ் பெற்ற சில தமிழ் தொலைக்காட்சி பிரபலங்கள் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். அதற்கு அவர்களின் கடின உழைப்பும் புத்திசாலித்தனமும் தான் காரணம்.

இந்நிலையில் சின்னத்திரையில் கலக்கி வெள்ளித்திரையில் பிரபலங்களான நடிகை, நடிகர்கள் பற்றி பார்க்கலாம்.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் முதல் முதலில் ரியாலிட்டி கிங்ஸ் ஆஃப் டான்ஸில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பிரபல தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிகையாக அறிமுகமானார். அவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 5, மற்றும் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 1 போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துள்ளார். பின்னர் அவர் தனது வாழ்க்கையை திரைப்படத் துறைக்கு மாற்றினார். அதன் பிறகு மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து கார்த்தி, தனுஷ், அருண் விஜய், ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் கமலின் இந்தியன் 2 படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்

கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பு திறமையால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சிவகார்த்திகேயன் ‘பாய்ஸ்’ vs கேல்ஸ் என்ற நடன ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். அதை தொடர்ந்து மிக விரைவில் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக மாறினார்.

அதை தொடர்ந்து மெரினா படத்தின் மூலமாக கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தற்பொழுது ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி ஹீரோவாக உச்சத்தில் உள்ளார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் 100 கோடியில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை படைத்து வருகிறது.

கார்த்திக் ராஜ்

கார்த்திக் ஜோடி ஃபன் அன்லிமிடெட்டில் போட்டியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் அவர் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் (2011-2012) நடித்தார், இதில் அவர் கார்த்திகேயன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 7 இல் நடிகை நான்சி ஜெனிபருடன் பங்கேற்றார்.

2017 ஆம் ஆண்டில், நடிகை ஷபனானுடன் தமிழ் சீரியலான செம்பருத்தியில் ஆதித்யா என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்திக் நடித்தார். அந்தத் தொலைக்காட்சித் தொடர் கார்த்திக்கை‌ மிகவும் பிரபலமாக்கியது. பின்னர், திரைப்படங்களில் அடியெடுத்து வைத்த கார்த்திக், நடிகை ரம்யா பாண்டியனுடன் இணைந்து முகிலன் படத்தில் அறிமுகமானார்.

ரியோ ராஜ்

நடிகர் ரியோ ராஜ் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ‘கனா காணும் கலங்கள் கல்லூரி சாலை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகராக இருந்தார். மேலும் ரியோ வீடியோ ஜாக்கியாகவும் பணியாற்றினார், பகல்நேர நிகழ்ச்சிகளான கல்லூரி காலம்  போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

2016 மற்றும் 2018 க்கு இடையில் பிரபலமான தொலைக்காட்சி சீரியலின் மூன்றாவது சீசனான சரவணன் மீனாட்சியில் ரியோ முக்கிய வேடத்தில் நடித்தார். அவர் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழ் 4 இல் பங்கேற்றார். பின்னர், 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

லியோ இரண்டாம் பாகம் உறுதி செய்த படக்குழு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

வாணி போஜன்

இவர் தொடக்க காலத்தில் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என பல சீரியலில் நடித்தார்.

வாணி போஜன், நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

கவின்

கவின் நடன ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சரவணன் மீனாட்சி -2 சீரியலில் நடித்தார், அதில் அவர் வேட்டையன் கேரக்டரில் நடித்தார். மேலும் அவர் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அதன் பிறகு, அவர் ஹீரோவாக நடிப்புனா என்னான்னு தெரியுமா , லிஃப்ட், டாடா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...