லியோ இரண்டாம் பாகம் உறுதி செய்த படக்குழு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது முறையாக இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது முழுமையாக முடிந்துள்ளது.

மேலும் மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் தான் லியோ படத்தையும் ப்ரொடியூஸ் செய்து வருகிறார். அதே போல இந்த கூட்டணியில் அனிருத்தும் இணைந்தது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நா ரெடி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் படத்தில் பல முக்கிய பிரபலங்கள் களமிறங்கி கலக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் லியோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. தற்பொழுது இந்த தகவல் உறுதியாகும் விதத்தில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. லியோ படத்தின் ஆர்ட் டேரெக்டர் சதீஷ் குமார் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது முழுமையாக முடிந்து விட்டதாகவும், அதற்காக போடப்பட்ட செட் எல்லாம் தற்பொழுது பிரித்து வருவதாகவும் கூறினார். மேலும் லியோ படத்தின் மூலமாக தளபதி அவர்களுடன் 6 மாதம் பயணிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.

மேலும் இது போன்ற வாய்ப்பு கிடைப்பதற்கு ஹாப் டிகேட் காத்திருக்க வேண்டும். மிஸ் யூ சார் என பதிவிட்டுள்ளார். ஹாப் டிகேட் என்பது 5 ஆண்டுகள் என குறிக்கிறது. மீண்டும் இந்த கூட்டணி அமைய கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த கூட்டணி அமைந்தால் அந்த படம் லியோ படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு இடையில் விஜய் அவர்கள் வெங்கட் பிரபு உடன் இணைந்து ஒரு படமும், அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் உடன் இணைந்து ஒரு படமும் உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

மாவீரன் படத்தில் மகள் அதிதியின் நடிப்பை பாராட்டிய இயக்குநர் சங்கர்!

இதற்கு இடையில் லோகேஷ் அவர்களும் லியோ படத்தை தொடர்ந்து கார்த்தி வைத்து கைதி 2, விக்ரம் 2, ரஜினி படங்கள் மற்றும் தெலுங்கு படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் இருவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெரும் பட்சத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...