சிவகுமார் பண்ணதுல தப்பே இல்ல.. சால்வையை தூக்கி எறிந்த சம்பவத்திற்கு பின்னாடி இருந்த பல ஆண்டு கால நட்பு..

Published:

இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் எங்காவது ஒரு சம்பவம் நடந்துவிட்டால் அது உடனடியாக இணையதளத்தில் அதிகம் வைரலாகி மிகப்பெரிய அளவில் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, நடிகர் சிவகுமார், ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது அந்த செல்போனை பிடுங்கி வீசி இருந்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் பரவி சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது மட்டுமில்லாமல் சிவகுமாருக்கு எதிரான கருத்துகளையும் உண்டு பண்ணி இருந்தது. பொது இடங்களில் இது போன்ற செயல்கள் பிடிக்காமல் தான் அவர் அப்படி செய்தார் என்றும் கருத்துக்கள் பரவ, இதே போன்று மற்றொரு முறையும் செல்போனை தட்டி விட முயற்சி செய்திருந்தார் சிவகுமார்.
sivakumar friend

அப்படி இருக்கையில் தற்போது மீண்டும் நடிகர் சிவகுமார் பற்றிய செய்தி ஒன்று வேகமாக பரவி வந்தது. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் மேடை அருகே வந்த வயதான நபர் ஒருவர் சிவகுமாருக்கு பொன்னாடை போர்த்த முயன்றார். அப்போது அந்த நபர் போடவந்த பொன்னாடையை தடுத்ததுடன் சிவகுமார் தூக்கி வீசி எறிந்தது கடும் அதிர்ச்சியை கிளப்பி இருந்தது.

செல்ஃபி எடுத்தாலும் பொன்னாடை போட வந்தாலும் இது மாதிரி பண்ணினால் என்ன செய்வது என்பதையும் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் சரமாரியாக பகிரப்பட்டது. இந்த நிலையில் அவர் பொன்னாடையை தூக்கி வீசியது தவறான செயல் இல்லை என நபர் ஒருவர் தெரிவித்துள்ளது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

அதாவது சிவகுமாருக்கு பொன்னாடை போர்த்த வந்த நபரின் பேரன் ஒருவர் பேஸ்புக்கில் இதன் உண்மை என்ன என்பது பற்றி கமெண்ட் ஒன்றை செய்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்களின் படி, சிவகுமாரும் அவருக்கு சால்வை போட வந்த நபரும் சுமார் 50 ஆண்டுகள் நண்பர்களாக இருந்து வருவதாக தெரிகிறது. மேலும் அந்த நபர் தங்களது தாத்தாவிடம் இது பற்றி பேசும் போது சிவகுமார் அதனை ஃபிரண்ட்லியாக தான் செய்தார் என்றும், ஒரு நண்பருக்கு பொன்னாடை எதற்கு என்ற தொனியில் தான் அவர் அப்படி மறுத்துவிட்டு தூக்கி வீசினார் என்றும் இதில் விளக்கம் கொடுத்துள்ளார்.
sivakumar truth

அதுமட்டுமில்லாமல், தனது குடும்பத்தில் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் சிவகுமார் ஒரு குடும்ப நண்பராக வந்து விடுவார் என்றும், நாங்களும் அவரது குடும்பத்தில் ஏதாவது விசேஷம் என்றால் கலந்து கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தயவு செய்து இது போன்ற தவறான செய்திகளை உண்மை என்னவென்று தெரியாமல் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...