சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார், கலகலப்பான பேச்சின்மூலம் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட இவர் வெகுவிரைவில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், என இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களே பெரிய அளவில் வசூலினைக் குவித்த படங்களாக இருந்தன.
கோலமாவு கோகிலா படத்தை எடுத்த நெல்சன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சிவ கார்த்திகேயன் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள அனு என்ற புலியின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை 2018 ஆம் ஆண்டு முதல் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம் வருமான வரி விலக்கு பெற்றுவரும் அவர், வெள்ளைப்புலி அனுவை மே மாதத்தில் இருந்து மேலும் நான்கு மாதங்களுக்கு இந்த தத்தெடுப்பை நீட்டித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.