தமிழ்த்திரை உலகில் நடிகர் திலகம் என்று போற்றப்பட்டவர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பு இமயத்தையே தொட்டது. அந்தளவு இவர் தன் நடிப்புத்திறமையால் பார் போற்ற பேசப்பட்டார். இவரது பெருந்தன்மைக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு பார்ப்போம்.
சிவாஜி நாடகங்கள்ல நடிச்ச காலகட்டத்துல அதிகபட்சமா 30 அல்லது 40 நாள்கள் தான் ஒரு ஊர்ல தங்குவாங்க. வேலூர், குடியாத்தம் போன்ற ஊர்களில் எல்லாம் நாடகம் நடத்திய பிறகு தேனி அருகில் உள்ள பெரியகுளத்துக்கு நாடகம் நடத்தச் சென்றார் சிவாஜி.
அப்போது சக்தி நாடக சபாவின் தலைவரான சக்தி கிருஷ்ணசாமி எழுத்தில் உருவான தோழன் நாடகத்தை திரைப்படமாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்தன. அதனால அவர் அங்கிருந்து கிளம்பி சென்னைக்குப் போய்விட்டார். அவர் சென்னைக்குப் போன உடனே அந்த நாடகக் குழுவில் பெரிய சோகம் சூழ்ந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
சரியாக பணவரவு இல்லாததனால 3 வேளையும் சாப்பிட முடியாத நிலை அவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. பெரியகுளத்தில் தான் சிவாஜியோட மாமா வீடு இருந்தது. ஆனாலும் சிவாஜி அங்கு போவதைத் தவிர்த்தார்.
நம்ம கூட இருக்குற எல்லா பசங்களும் பசியோடு இருக்கும்போது நான் மட்டும் மாமா வீட்டுல போய் எப்படி நிம்மதியா சாப்பிட முடியும்? அதன் காரணமாகத் தான் நான் அங்கே போகல என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் சிவாஜி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


