இந்த படத்தில் நடித்த ஒருவர் கூட மேக்கப் போட்டு நடிக்கவில்லை.. இப்படி ஒரு சிவாஜி கணேசன் படமா?

Published:

ஒரு திரைப்படம் என்றால் நடிகர், நடிகைகள் முதலில் கவனம் செலுத்துவது மேக்கப்பில்தான். மேக்கப்புக்கு என்றே பல லட்சங்கள், கோடிகள் செலவு செய்யப்படும் என்பதும் வெளிநாட்டில் இருந்துகூட மேக்கப் கலைஞர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

ஆனால் ஒரு படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே மேக்கப் இல்லாமல் நடித்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் வந்திருக்கிறது, அதுதான் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, முத்துராமன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான ‘நெஞ்சிருக்கும் வரை’ என்ற திரைப்படம். இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

nenjirukkum varai 3

கடந்த 1967ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சுமாரான வரவேற்பு பெற்றது. சிவாஜி கணேசனின் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

சிவாஜி கணேசன், கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் நண்பர்களாக சென்னையில் வாழ்ந்து வருவார்கள். பசி, பட்டினியுடன் ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டு அவர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு இன்னொரு நண்பனாக முத்துராமன் கிடைக்கிறார்.

ஊரில் தனக்கு நிறைய சொத்து இருக்கிறது என்றும் ஆனால் அவை நீதிமன்ற வழக்கில் இருக்கிறது என்றும் தனக்கு மட்டும் நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்துவிட்டால் தான் பெரிய பணக்காரர் ஆகிவிடுவேன் என்றும் முத்துராமன் கூறுகிறார்.

nenjirukkum varai 2

முத்துராமனும் சேர்ந்து பசி, பட்டினி, வறுமையை பகிர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சிவாஜிக்கு கே.ஆர்.விஜயா உடன் காதல் அரும்புகிறது. ஆனால் அதே நேரத்தில் முத்துராமன், கே.ஆர்.விஜயாவை ஒருதலையாக காதலிக்கிறார். இந்த நிலையில் தான் முத்துராமனுக்காக தனது காதலை தியாகம் செய்கிறார் சிவாஜி.

சிவாஜி படத்தை இயக்கியவர்.. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர்.. நடிகை விஜய நிர்மலாவின் சாதனை..!

இந்த நிலையில் முத்துராமனுக்கு சாதகமாக வழக்கின் தீர்ப்பு வர அவர் பணக்காரர் ஆகிறார். ஊரில் போய் சொத்துக்களை மீட்டு மீண்டும் அவர் சென்னைக்கு வந்த போது சிவாஜி, கே.ஆர்.விஜயா மீது சந்தேகப்படுகிறார். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அவருக்கு விளக்கி கூறி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.

இருப்பினும் முத்துராமன் திருமணத்திற்கு பின்னரும் சந்தேக கண்ணுடன் பார்க்க ஒரு கட்டத்தில் அவர் குடிகாரராக மாறிவிடுகிறார். இந்த நிலையில் கே.ஆர்.விஜயாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று வருத்தப்படும் சிவாஜி கணேசன், கிளைமாக்ஸில் தன்னுடைய உயிரை கொடுத்து இருவரையும் இணைத்து வைக்கிறார். இருவரின் நெஞ்சிருக்கும் வரை சிவாஜியின் நினைவு இருக்கும் என்பதாக பட முடியும்.

nenjirukkum varai 1

இதில் சிவாஜி கணேசன், முத்துராமன், கோபாலகிருஷ்ணன் ஆரம்ப காட்சிகளில் அபாரமாக நடித்திருப்பார்கள். குறிப்பாக சென்னை கடற்கரை சாலையில் மூவரும் ஆடி பாடும் ‘நெஞ்சிருக்கும் எங்களுக்கு’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

அதேபோல் இந்த படத்தில் இடம்பெற்ற ‘பூ முடிப்பாள் இந்த பூங்குழலி’ என்ற பாடல் ஒலிக்காத திருமண நிகழ்ச்சியே இருக்காது. இந்த பாடலில் ‘நிகழும் பார்த்திப ஆண்டு/ ஆவணித் திங்கள் இருபதாம் நாள்/ திருவளர் செல்வன் சிவராமனுக்கும்/ திருவளர் செல்வி ராஜேஸ்வரிக்கும்/ நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து/ வாழ்த்தியருள வேண்டுகிறேன்/ தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன் ரகுராமன் ரகுராமன்/’ என்று பத்திரிகையை வாசித்துப் பாடுவார்.

இந்த படம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் பொதுவான ரசிகர்கள் இந்த படத்தால் அதிருப்தி அடைந்தனர். இந்த படம் வசூல் அளவிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சிவாஜி கணேசன் கேரக்டர் கடைசியில் இறந்து விடுவதை பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்த படத்தின் தனி சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் நடித்த சிவாஜி கணேசன், முத்துராமன், கோபாலகிருஷ்ணன், கே.ஆர்.விஜயா உள்பட ஒருவர் கூட மேக்கப் போடாமல் நடித்தனர். இந்த படம் எளிமையானவர்களின் கதை அம்சம் என்பதால் அவர்கள் வீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்த காஸ்ட்யூமில்தான் படப்பிடிப்பு நடந்தது.

3 கேரக்டர்கள் மட்டுமே.. 175 நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.. 10 மடங்கு லாபம்.. காவிய திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்..!

ஆரம்பக்காட்சி முதல் கடைசி காட்சி வரை மேக்கப் போடாமல் இருந்தனர். கல்யாண காட்சியில் மட்டுமே மணமக்களுக்கு மேக்கப் போடப்பட்டது. முழுக்க முழுக்க மேக்கப் இல்லாமல் இப்படி ஒரு படம் இனிமேல் வருமா என்பது சந்தேகமே.

மேலும் உங்களுக்காக...