அனிருத் வீட்டிற்கு மகன், மகளுடன் சென்ற ஷாலினி!

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வலம் வருபவர் தான் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனிருத் தனது முதல் படத்திலேயே உலகமெங்கும் பிரபலம் அடைந்துள்ளார். அடுத்தடுத்த தனுஷ் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத் மற்ற ஹீரோக்களின் படங்களிலும் தற்பொழுது இசையமைத்து வருகிறார். மேலும் மற்ற இசையமைப்பாளர் படங்களிலும் பாடல்கள் பாடி ட்ரெண்ட் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது அனிருத் இசையின் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வெளியாகி எதிர்பார்க்காத அளவு வெற்றியை பெற்று வருகிறது. அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கும் இசையமைத்தவர் அனிருத் தான். அதைத்தொடர்ந்து சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்திற்கும் அனிருத் இசை அமைத்துள்ளார்.

மேலும் அட்லீ இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சாருக்கான் நடித்த ஹிந்தி திரைப்படமான ஜவான் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படி முன்னணி ஹீரோக்களின் மாபெரும் பட்ஜெட்களில் உருவாகும் அனைத்து படத்திற்கும் தற்பொழுது அனிருத் இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனிருத் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பளம் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சம்பளத்தை விட அதிகமாக இருப்பதால் தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி இசையமைப்பாளராக அனிருத் வலம் வருகிறார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க அனிருத் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் கொடிகட்டி பறந்து வருவதால் இந்த சம்பளம் குறித்த விஷயம் பெரிதாக பார்க்கப்படவில்லை.

இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் பிஸியாக இசையமைத்து வரும் அனிருத் வீட்டில் நவராத்திரியை முன்னிட்டு கொலு அமைக்கப்பட்டு தரிசன பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைக்காக சினிமா பிரபலங்கள் பலருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அந்த வகையில் நடிகர் அஜித் வீட்டிற்கும் இந்த அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

தளபதி 68 படத்தில் சந்தானம்! புது யுக்தியை கையாளும் வெங்கட் பிரபு!

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகன் மகள்கள் மூவரும் அனிருத் வீட்டில் நடந்த நவராத்திரி கொலு பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் மக்கள் மனதில் என்றும் நீங்காத கதாநாயகியாக வலம் வருகிறார்.

மேலும் அனிருத் இசையில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படம் தற்பொழுது துபாய் அருகில் உள்ள அஜர்பைஜானில் மிக வேகமாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். லியோ திரைப்படத்தைப் போன்று அனிருத் இசையில் விடாமுயற்சி படத்திலும் தெறிக்கவிடும் வகையில் பல பாடல்கள் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews