நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எத்தனையோ சென்டிமென்ட் படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஒரு சில முழு நீள காமெடி படங்களிலும் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று தான் சபாஷ் மீனா. இந்த படம் 1958 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெளியானது.
சிவாஜி கணேசன், பி ஆர் பந்தலூ, சரோஜாதேவி, மாலினி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தில் சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்போது சந்திரபாபு மிகப்பெரிய அளவில் தமிழ்த்திரை உலகில் ஆதிக்கம் செலுத்தியதால் அவர் சிவாஜி கணேசனைவிட கூடுதலாக சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று நிபந்தனை விதித்ததாகவும், இதனை அடுத்து சிவாஜியை விட அவருக்கு ஒரு ரூபாய் அதிகமாக தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த படத்தின் கதை என்னவென்றால் மிகப்பெரிய பணக்காரரின் மகனான சிவாஜி நண்பர்களுடன் ஊர் சுற்றுதல், நாடகம் பார்ப்பது, என ஜாலியாக சுற்றிக் கொண்டிருப்பார். சிவாஜியை ஒரு நல்ல பொறுப்புள்ள மனிதனாக்க வேண்டும் என்று சென்னையில் இருக்கும் தனது நண்பர் ரங்காராவிடம் அனுப்பி வைப்பார்.
சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்க ஆசைப்பட்ட 5 நடிகைகள்!
ஆனால் சிவாஜி தனது அப்பாவின் நண்பர் வீட்டுக்கு தனது நண்பர் சந்திரபாபுவை அனுப்பி வைத்துவிட்டு இவர் சென்னையில் வேறொரு இடத்தில் இருப்பார். ரங்காராவ் வீட்டிற்கு செல்லும் சந்திரபாபு அங்கே அவருடைய மகள் சரோஜாதேவியை காதலிப்பார்.
இந்த நிலையில் சென்னையில் இருக்கும் சிவாஜி மாலினியை காதலிப்பார். இந்த நிலையில் மகனை பார்ப்பதற்காக சிவாஜியின் அப்பா, ரங்காராவ் வீட்டிற்கு வரும்போதுதான் ஆள்மாறாட்டம் நடந்தது தெரிந்ததும் அதிர்ச்சி அடைவார்.
ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல.. 17 முறை ஒரே நாளில் வெளியான சிவாஜியின் இரண்டு படங்கள்.. பெரும் சாதனை..!
இதனை அடுத்து உடனே அவர் மகனை தேடுவார். குப்பத்தில் இருக்கும் தனது மகனை கண்டுபிடிப்பார். இந்த நிலையில் மாலினிக்கு சொந்தக்காரரான ஒருவர் அவர் வேலை செய்யும் முதலாளியிடம் பணத்தை சுருட்டி இருப்பார். அதை கண்டுபிடித்த சிவாஜி அவரை கண்டிப்பார். அந்த கோபத்தில் அவர் சிவாஜி மீது ஒரு கொலைபழியை போட்டு விடுவார், சிவாஜி கைது செய்யப்படுவார்.
இந்த நிலையில் சந்திரபாபு, ரங்காராவ் வீட்டில் இருந்து தப்பித்து விடுவார், அவரை பிடிப்பதற்காக ரங்காராவ் மற்றும் சிவாஜியின் அப்பா தேடுவார்கள், அப்போது வேறொரு சந்திரபாபுவை பிடித்து வந்து விடுவார்கள். அந்த சந்திரபாபு ரிக்சாகாரராக இருப்பார். அவர் ரங்காராவ் வீட்டுக்கு கொண்டு வந்து மாட்டிக்கொள்வதும், இங்கே இருந்த உண்மையான சந்திரபாபு ரிக்சாக்காரன் வீட்டில் மாட்டிக் கொள்வதுமான காட்சிகள், அதன் பிறகு சிவாஜியை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர எடுக்கும் முயற்சி, இரண்டு சந்திரபாபுகள் செய்யும் குழப்பம், அதன்பின் பல்வேறு காமெடி குழப்பங்களுக்கு பிறகு முடிவு சுபமாக இருக்கும்.
இந்த படத்தில் டிஜே லிங்கப்பா என்பவர் இசையமைத்திருந்தார். பத்து பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருந்தன என்பதும் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக சித்திரம் பேசுதடி என்ற பாடல் இன்றளவும் பிரபலம் என்று கூறலாம்.
சிவாஜி தங்கையாக ஸ்ரீதேவி.. அந்த காலத்திலேயே ஒரு ‘புதிய பாதை’..!
கண்ணதாசனின் சகோதரர் ஏஎல் சுப்பிரமணியன் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் பாதிப்பில் தான் தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்தது. அவற்றில் ஒன்று சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடித்த உள்ளத்தை அள்ளித்தா மற்றொன்று ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு என்பது குறிப்பிடத்தக்கது.