Siragadikka Aasai:’என்ன கண்ணு செளக்கியமா? சிந்தாமணியை கலாய்த்த மீனா.. விஜயாவை எச்சரிக்கும் அண்ணாமலை..!

’என்ன கண்ணு செளக்கியமா? சிந்தாமணியை கலாய்த்த மீனா.. விஜயாவை எச்சரிக்கும் அண்ணாமலை..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்று சிந்தாமணி வீட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முத்து குழுவினர், வீட்டை…

sa3 3

’என்ன கண்ணு செளக்கியமா? சிந்தாமணியை கலாய்த்த மீனா.. விஜயாவை எச்சரிக்கும் அண்ணாமலை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில், இன்று சிந்தாமணி வீட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முத்து குழுவினர், வீட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறுகின்றனர். அப்போது சிந்தாமணி இடம் ஸ்ருதி மட்டும் மாட்டிக்கொள்ள, அவரும் ஏதேதோ சொல்லி சமாளித்து தப்பித்து வருகின்றனர்.

பல குரல் ’நல்ல புத்திசாலி கண்டிப்பாக தப்பித்து விடுவார்’ என்று முத்து கூற, ரவி பயந்து கொண்டே இருக்க, ஸ்ருதி வந்தவுடன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக வந்து விடுகின்றனர்.

இதனை அடுத்து, மீனாவிடம் ’பணம் கிடைத்துவிட்டது’ என்று முத்து போனில் சொல்ல, மீனா மகிழ்ச்சி அடைகிறார். அதன் பின்னர், சிந்தாமணிக்கு போன் செய்யும் மீனா, ’என்ன கண்ணு, சௌக்கியமா, இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் போல் வந்தது என் குடும்பத்தார்தான். நீ என்னை ஏமாற்றி உன்னுடைய ஆட்களை வைத்து பணத்தை திருடினாய். நான் உன்னை ஏமாற்றி, என்னுடைய ஆட்களை வைத்து எனக்கு சேர வேண்டிய பணத்தை எடுத்துவிட்டேன்’ என்று சொல்ல, சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார்.

’வந்தது யார், என்ன’ என்று கூட விசாரிக்காமல் வீட்டில் நுழைய விடுவதா என, தன்னுடைய வீட்டில் உள்ள ஆட்களை அவர் திட்டுகிறார்.

இதனை அடுத்து, பணத்துடன் வீட்டிற்கு வரும் முத்து, ரவி, ஸ்ருதி ஆகியோர், அண்ணாமலை இடம் நடந்ததை கூறுகின்றனர். ’சிந்தாமணி தான் இந்த பணத்தை எடுத்தார்’ என்று தெரிந்ததால், ’அவருடைய வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி போல் சென்று பணத்தை எடுத்து விட்டோம்’ என்று கூற, விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்னர், முத்து, ’சிந்தாமணி அம்மாவின் பிரண்டு தான், அவர்தான் நம்ம மீனாவின் தொழிலை முடக்க சதி செய்து வருகிறார்’ என்று சொல்ல, விஜயாவை அண்ணாமலை எச்சரிக்கிறார்.

’இந்த மாதிரி ஆட்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம், முத்துவும் மீனாவும் வாழ்க்கையில் முன்னேறி வந்தால் நமக்குத்தானே பெருமை. இந்த குடும்பத்திற்கு தானே பெருமை. இந்த குடும்பத்தில் உள்ள ஒருவரை கெடுக்க நினைக்கும் ஒருவருடன் எதற்காக பழக்கம் வைத்து கொள்கிறாய்? என்று கூற, உடனே விஜயா, ’சிந்தாமணி அப்படிப்பட்டவங்க கிடையாது. பல வருடமாக தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். இவதான் அவங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்’ என்று கூறுகிறார்.

அப்போது, ’யாரிடமும் போட்டி போட மாட்டேன், என்னுடைய தொழிலை நான் நியாயமாக செய்கிறேன்’ என்று மீனா சொல்கிறார்.

இதனை அடுத்து, அண்ணாமலை மீண்டும் விஜயாவை எச்சரிப்பதுடன், இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.