விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில், இன்றைய எபிசோட்டில் சீதா தனது காதலன் அருணிடம் நடந்ததை கூறுகிறார். அருண், அவருக்கு ஆறுதல் கூறி, ’நான் ட்ரைனிங் முடித்து வந்தவுடன் ஏதாவது செய்கிறேன்’ என்று சொல்கிறார்.
’இல்லை, தேவை இல்லை, என் நாங்கள் போலீசில் புகார் அளித்துள்ளோம். என் மாமாவும் தேடிக் கொண்டிருக்கிறார். நீங்கள் நல்லபடியாக ட்ரைனிங் முடித்துவிட்டு வாருங்கள்’ என்று சீதா சொல்கிறார். அதன் பிறகு, ’உங்கள் அம்மாவுக்கு இன்று செக்கப் இருக்கிறது, நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றும் சீதா கூறுகிறார்.
இதனை அடுத்து, முத்து மற்றும் செல்வம் ஆகிய இருவரும் பார்வதி வீட்டுக்கு செல்கின்றனர். பார்வதியை பார்த்தவுடன், முத்து அழுவது போல் நடிக்கிறார். ’மீனாவுக்கு இப்படி ஆகிவிட்டது, யாரோ சதி செய்துவிட்டார்கள்’ என்று கதறி அழுது கொண்டே சொல்ல, பார்வதி, ’இதையெல்லாம் செய்தது சிந்தாமணி தான்’ என்று உளற, முத்து, ’அப்போது சிந்தாமணி தான் இதற்கு காரணம்’ என்பதை கண்டுபிடிக்கிறார்.
அதன் பிறகு , பார்வதியிடம், ’எனக்காக நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும், சிந்தாமணியை எப்படியாவது உங்கள் வீட்டுக்கு பொய் சொல்லி ஒரு 3 மணி நேரம் வரவழைத்து விடுங்கள். அந்த நேரத்தில் நாங்கள் அவருடைய வீட்டில் சென்று பார்த்து அந்த பணத்தை எடுத்து விடுகிறோம்’ என்று கூறுகிறார். பார்வதியும் ’சரி’ என்று சொல்கிறார்.
இந்த நிலையில், மீனா பூ கொடுப்பதற்காக வண்டியில் சென்று கொண்டிருப்பபோது, ஆட்டோக்காரர் ஒருவர் நிறுத்தி, ’ஒரு அம்மா அவசரமாக ஹாஸ்பிடல் போக வேண்டும், நீங்கள் உதவி செய்யுங்கள்’ என்று கூற, அப்போது அருண் அம்மா அந்த ஆட்டோவில் இருந்து இறங்கி வருகிறார். அவரை மருத்துவமனையில் கொண்டு போய் விடும்போது, சீதாவை அங்கே பார்க்கிறார்.
சீதா, ’அவர்தான் தன்னுடைய வருங்கால மாமியார்’ என்று மீனா விடம் சொல்ல, சீதா மற்றும் மீனா இடையிலான உரையாடல் கேலியும் கிண்டலுமாக நடக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
இதனை அடுத்து, ரவி, சுருதி, மீனா செல்லும் முத்து ஆகியோரை எல்லோரையும் அழைத்து, மொட்டை மாடியில் உட்கார வைத்து, ’இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் போல் நாம் சென்று சிந்தாமணி வீட்டில் உள்ள பணத்தை எடுக்க வேண்டும்’ என்று திட்டமிடுகிறார். அதற்கு சுருதி ஒத்துழைப்பதாக போற, மற்றவர்கள் யோசிக்கின்றனர்.
’இன்கம் டேக்ஸ் உயர் அதிகாரி போல் நடிக்க ஒரு ஆள் வேண்டும்’ என்று முத்து சொல்ல, சுருதி உடனே, ’நான்தான் உயர் அதிகாரி, நான் எத்தனை படத்தில் டப்பிங் செய்திருப்பேன்’ என்று கூற, ’நீதான் சரியான ஆள், பல குரல்’ என்று முத்துவும் ஒப்புக்கொள்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
அடுத்து வார எபிசோடில், முத்து மற்றும் அவரது குழுவினர் சிந்தாமணி வீட்டிற்கு இன்கம் டாக்ஸ் அதிகாரிகள் போல் நடித்து, பணத்தை எடுத்து விடுகின்றனர். அப்போது, மீனா சிந்தாமணிக்கு மீனா போன் செய்து, ’இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் உங்கள் வீட்டில் பணத்தை எடுத்து இருப்பார்களே’ என்று சொல்ல, சிந்தாமணி, ’உனக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்க, ’இன்கம் டேக்ஸ் அதிகாரிகளாக வந்ததே என் வீட்டு ஆள்கள்’ என்று சொல்வதுடன் ப்ரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.