Siragadikka Aasai: மீண்டும் முத்து – அருண் மோதல்.. சீதா காதலை கண்டுபிடித்த அம்மா.. சிந்தாமணிக்கு சவால்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் மீனா மற்றும் அவருடைய அம்மா ஆகிய இருவரும் அருண் வீட்டுக்கு சென்று நன்றி தெரிவிக்கின்றனர். “உங்கள் பையனால் தான் என்னுடைய…

sa5

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்றைய எபிசோடில் மீனா மற்றும் அவருடைய அம்மா ஆகிய இருவரும் அருண் வீட்டுக்கு சென்று நன்றி தெரிவிக்கின்றனர். “உங்கள் பையனால் தான் என்னுடைய தம்பி தேர்வு எழுதினான், மேலும் உயிரோடும் இருக்கிறான்,” என்று கூறி நன்றி கூற, “அவன் தன் கடமையைத்தான் செய்தான்,” என்று கூறுகிறார் அருண் அம்மா. அதற்கு சீதாவின் அம்மாவும் நன்றி கூறுகிறார்.

இரண்டு குடும்பங்களும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், சீதா மற்றும் அருணை சீதாவின் அம்மா கவனிக்கிறார். இருவருக்கும் ஏதோ பழக்கம் இருக்கும் என்று அவர் சந்தேகிக்கிறார். வெளியே வந்தவுடன், “இந்த தம்பி உனக்கு மட்டும் தான் உதவி செய்கிறாரா அல்லது எல்லோருக்கும் இப்படி உதவி செய்வாரா?” என்று கேட்க, சீதா திருதிருவென முழிக்கும் போது, “ஆட்டோ வருகிறது” என்று கூறி சமாளிக்கிறார்.

எனவே, சீதாவின் அம்மாவுக்கு காதல் குறித்த சந்தேகம் ஏற்பட்டு விட்டது என்று தெரிகிறது.

இதனை அடுத்து, மண்டபம் டெக்கரேஷன் ஆர்டருக்காக சிந்தாமணி, மீனா உள்பட சிலர் வருகை தந்திருக்கின்றனர். மண்டப மேனேஜர், “இந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என்றால் டெபாசிட் வாங்க வேண்டும்,” என்று கார்ப்பரேட் நிறுவனம் சொல்லியிருக்கிறது. எனவே, “டெபாசிட் கட்ட முடியும் என்பவர்கள் மட்டும் இந்த ஆர்டரை பற்றி பேசலாம்,” என்று கூறுகிறார்.

உடனே, ஆர்டர் கேட்க வந்த சிலர், “எங்களால் இதெல்லாம் முடியாது,” என்று வெளியேறுகின்றனர். கடைசியில் சிந்தாமணி, ‘நான் நினைத்தால் இன்னும் பத்து நிமிஷத்தில் டெபாசிட் பணத்தை கட்ட முடியும்,” என்கிறார். ஆனால், மீனாவுக்கு அப்படி அல்ல. அவருடைய குடும்பத்திலும் சப்போர்ட் கிடையாது.

எனவே, “எனக்குத் தான் இந்த ஆர்டர் கிடைக்கும். உடனே எனக்கு ஆர்டர் கொடுத்து விடுங்கள்,” என்று கூற, “என்னாலும் முடியும், எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்று மீனா கூறுகிறார். அப்போது, இருவருக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்படுகிறது.

இதனை அடுத்து, மீனா வீட்டிற்கு வந்து முத்துவிடம், “டெபாசிட் பணம் கட்ட சொல்கிறார்கள்,” என்று கூற, “ரெண்டரை லட்சமா? ரொம்ப அதிகமாக இருக்கிறது. சரி, நான் அப்பாவிடம் பேசி பார்க்கிறேன்,” என்று கூறுகிறார்.

அண்ணாமலையை அழைத்து, “மீனாவுக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது, ஆனால் டெபாசிட் பணம் கட்ட வேண்டும்,” என்று கூற, உடனே விஜயா, “நீ எங்க சுத்தி எங்க வார என்று எனக்குத் தெரியும். வீட்டில் மேல அடமானம் வைத்து இரண்டு லட்ச ரூபாய் கேட்க போறேன். அதுதானே?” என்று கேட்க, முத்துவும், அண்ணாமலையும் அவரை பார்ப்பதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோடில், முத்து காரை ஓட்டி வரும்போது அருண் அவரை வழிமறித்து, “குடிச்சிருக்கியா?” என்று கேட்க, “நான் குடிக்கவில்லை,” என்று முத்து கூறுகிறார். “ஊது என்று அருண் கூற, அதெல்லாம் முடியாது,” என்ற முத்து தெனாவட்டாக சொல்ல, “அப்படி என்றால் கேஸ் போடுவேன்,” என்று அருண் கூற, இருவருக்கும் இடையே மோதல் நடப்பது போல் தெரிகிறது.

முன்னதாக செய்தால், “எங்க அக்கா மாமாவிடம் பேசி நம்ம விஷயத்தைப் பற்றி பேசுகிறேன். எங்க அக்காவும் எங்க மாமாவும் ரொம்ப நல்லவர்கள்,” என்று கூற அருணும், “ஆமாம், உங்கள் மாமா நல்லவராக தான் இருப்பார்,” என்று கூறுகிறார். ஆனால், முத்து தான் சீதாவின் மாமா என்று தெரியாமல், இருவரும் மோதும் காட்சிகள் நாளைய ப்ரோமோவில் உள்ளன.

இந்த மோதல், சீதாவின் விஷயம் தெரிந்தவுடன் நட்பாக மாறுமா? இன்னும் மோதல் அதிகரிக்குமா என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும்.