அதற்கு மீனா, “நாங்கள் எந்த சதியும் செய்யவில்லை. நாங்களாக தேடிப்போய் யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை. எல்லாமே தானாகத்தான் அமைந்தது. ஜீவா தானாகத்தான் என்னுடைய கணவர் காரில் ஏறினார். அதேபோல் கறிக்கடை மாமாவும் தானாகத்தான் எங்களை வந்து சந்தித்தார்,” என்று கூறுகிறார்.”உங்களுக்கு உங்கள் தப்பை நீங்கள் உணர்ந்தது நல்லதே. இனிமேல் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை,” என்று மீனா கூற, அதற்கு ரோகிணி அவரை முறைத்து பார்க்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ருதி ரோகிணியை தொடர்ந்து கிண்டல் செய்ய, “போதும், நிறுத்து,” என்று ரோகிணி கூறுகிறார். “என்னுடைய நிலைமை இப்படி எல்லோருக்கும் சிரிப்பாக ஆகிவிட்டது. ஆனால் இப்படியே எல்லா நாளும் இருக்காது,” என்று கூறி, மீனாவை முறைத்து விட்டு வெளியே செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ரோகிணி தன்னுடைய அறைக்கு செல்லும்போது, அவரைப் பார்க்க பிடிக்காமல் மனோஜ் மொட்டை மாடியில் சென்று படுப்பதற்காக பாய், தலையணையை எடுத்து செல்கிறார். அப்போது விஜயா அவரை தடுத்து, “நீ எதற்காக மொட்டை மாடிக்கு செல்ல வேண்டும்? அவளை கீழே படுக்கச் சொல், அவள் என்ன கோடீஸ்வரன் மகளா? ஒன்றுமில்லாதவள் தானே! நீ கட்டிலில் படுத்துக்கோ; அவளை கீழே படுக்கச் சொல்,” என்று கூற, ரோகிணி அதிர்ச்சியடைகிறார். வழக்கம் போல் அம்மாவின் பேச்சைக் கேட்டு மனோஜ் கட்டிலில் படுத்து கொள்கிறார்.
இந்த நிலையில், அடுத்ததாக முத்து மற்றும் மீனாவின் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கின்றன. அப்போது வித்யா, மீனாவுக்கு போன் செய்து தன்னுடைய காதல் குறித்து கூறுகிறார். மீனாவும் அவருக்கு வாழ்த்து கூறுகிறாள். அதன் பிறகு, மீண்டும் முத்து–மீனா ரொமான்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன.
இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி – ரவி உரையாடல் காட்சிகள் உள்ளன. “என்னுடைய தோழிக்கு மேக்கப் போட வேண்டும். அதற்காக நான் ரோகிணியிடம் சொல்லப் போகிறேன்,” என்று ஸ்ருதி கூற, “தாராளமாக சொல். ஆனால் ஆன்ட்டி கோபம் அடைவார்கள் என்று சொல்ல, ஆமாம், அம்மா கோபம் அடைய வாய்ப்பு இருக்கிறது,” என்கிறார் ரவி போகும்போது, ஸ்ருதி , ரவியிடம் கோபிக்கிற காட்சிகள் இடம்பெறுகின்றன.
“உங்கள் அம்மா கோபித்துக்கொண்டால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ரோகிணியிடம் இந்த மேக்கப் விஷயத்தில் சொல்லத்தான் செய்வேன். உங்கள் அம்மா ஏதாவது சண்டை போட்டால், அப்புறம் இருக்குது’ என்று ஸ்ருதி கூற, ரவி வழக்கம்போல் பரிதாபமாக பார்க்கிறார். ஸ்ருதி அனேகமாக ஒரு ஏழரையை இழுத்து விடுவார்,” என்பதால் அண்ணாமலை மீட்டிங்கில் மீண்டும் ஒரு பூகம்பம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய எபிசோட் புரோமோ வில் முத்து தனது நண்பர் செல்வத்துடன் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருக்க, அந்த ஹோட்டல் அருகே அருண் மற்றும் சீதா ஆகிய இருவரும் பைக்கில் வந்து இறங்கி பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை முத்து பார்த்து அதிர்ச்சி அடைவதுடன் முடிகிறது.