அதன்படி, சிந்தாமணிக்கு சீதாவை விட்டு போன் செய்யச் சொல்கிறார். “காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடை ஓனரின் மகளுக்கு கல்யாணம். நீங்கள்தான் டெக்கரேஷன் செய்ய வேண்டும்” என்று சீதா சொல்ல, சிந்தாமணியும் “சந்தோஷமாக, தாராளமாக செய்து விடுகிறேன்” என்று கூறுகிறார்.
இந்த போன் கால் ரெக்கார்ட் செய்து, நேராக ஸ்ருதியிடம் சென்று, அந்த உரையாடலை காட்டுகிறார். “இதே போல் சிந்தாமணி போல் நீங்கள் பேச வேண்டும்” என்று மீனா கூறுகிறார்.
ஸ்ருதியும் “இதெல்லாம் எனக்கு ரொம்ப ஈஸி என மீனா சொல்லி, அவர் சொல்லி கொடுத்தது போல், சிந்தாமணி குரலில் மண்டப மேனேஜரிடம் பேசுகிறார்.
மேனேஜரிடம் “மீனாவை ஏமாற்றிய பணத்தை எடுத்துக்கொண்டு பொன்னியம்மன் கோயிலுக்கு வா. நானும் அங்கு வருகிறேன். என்னிடம் பணத்தை கொடு” என்று ஸ்ருதி, சிந்தாமணி குரலில் கூறுகிறார். மண்டப மேனேஜரும் சிந்தாமணி தான் பேசுவதாக நினைத்து”சரி, உடனே வருகிறேன்” என்கிறார்.
இதனை அடுத்து, “நான் இன்னொருவருக்கு போன் செய்ய வேண்டும்” என்று மீனா அந்த நபருக்கு போன் செய்தவுடன், மீனாவும், சீதாவும் மண்டபத்துக்கு செல்கின்றனர்.
மண்டபத்தில் சிந்தாமணிக்காக காத்திருக்கும் மண்டப மேனேஜர், அவர் வந்தவுடன் பணத்தை கொடுக்கிறார். அப்போது, “இது மீனாவிடம் இருந்து ஏமாற்றிய பணம் தானே? ரொம்ப நன்றி. அவ போலீஸுக்கு எல்லாம் போக மாட்டா. அப்படியே போனாலும், போலீஸ் எல்லாம் நம்ம ஆளுங்க தான். நான் பாத்துக்குறேன்” என்று சிந்தாமணி மேனேஜரிடம் கூறுகிறார்.
அப்போது, ஒளிந்திருந்த மீனா வெளியே வர, மண்டப ஓனரும் இதை கேட்டு வெளியே வருகிறார். இதனால் சிந்தாமணி, மண்டப மேனேஜர் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இதனை அடுத்து, மேனேஜரிடம் மண்டப ஓனர், ‘நான் உன்னை நம்பி மண்டபத்தை ஒப்புவித்தேன். ஆனால், நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய்!” என்று சொல்லி, கன்னத்தில் பளார் என்று அடிக்கிறார். அதன்பின் சிந்தாமணியிடம், நீங்கள் எல்லாம் ஒரு பொம்பளையா? தொழிலில் போட்டியிருக்கலாம். அதற்காக இப்படி துரோகம் செய்வது தப்பு!” என்று கூறுகிறார். அதற்கு சிந்தாமணி அதிர்ச்சி அடைவதுடன், இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோட்டில் “என் பொண்டாட்டி மீனா மிகப்பெரிய சாதனை செய்து இருக்கிறார். அவளை தொழிலில் விரட்ட வெளியில் இருந்து மட்டுமல்ல, வீட்டிலிருந்தே சிலர் சதி செய்திருக்கிறார்கள்” என்று கூற, விஜயா அதிர்ச்சி அடைவதுடன் முடிகிறது!