இந்தியாவில் ஸ்டார்லிங்கின் இணைய சேவை வளர வாய்ப்பு இல்லை என்றும் ஏனெனில் மற்ற தொலைத்தொடர்பு துறையின் கட்டணத்தை ஒப்பிடும்போது ஸ்டார்லிங்க் விலை அதிகம் என்பதே காரணம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஸ்டார்லிங் வழங்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை, அதிக விலை காரணமாக குறிப்பாக மக்கள் அதிகம் வாழும் கிராமப்புறங்களில் வளர வாய்ப்பு இல்லை என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் சிறிய தொழில்கள் மற்றும் வணிக நோக்குடைய பயனர்களுக்காகவே இருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறினர்.
இதர்கு காரணமாக வல்லுநர்கள் கூறுகையில், ஸ்டார்லிங் இணைய சேவையின் விலை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற முன்னணி வழங்குநர்களின் சேவைக கட்டணங்களை விட 10 முதல் 14 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வாடிக்கையாளர் 200-250 Mbps வேகத்தில் இணையத்தை பெறலாம் என்றாலும், இந்தியாவில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சேவை முடக்கத்திற்கு உள்ளாகலாம் எனவும் கூறப்படுகிறது.
எனவே இந்தியாவின் FWA சேவைகளின் மலிவு விலைகள் காரணமாக, Starlink பெரிய அளவில் விரிவடைய வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்றும், அதிக விலை காரணமாக பெரும்பாலும் தொலைதூர பகுதிகளின் வணிக நிறுவனங்களுக்கே இது உதவலாம் என்றும் தெரிகிறது.
பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 100 Mbps முதல் 200 Mbps வரையிலான இணைய வேகத்தில் கொடுக்கும் சேவைக்கு அதிகபட்சமாக 1000 ரூபாய் மட்டுமே சேவை கட்டணமாக பெறுகிறது. ஆனால் 50 முதல் 200 Mbps வேகத்தில் சாட்டிலைட் மூலம் இணைய சேவை தரும் ஸ்டார்லிங்க் தனது சேவை கட்டணத்தை ரூ.52,000 என நிர்ணயம் செய்யும் என்று எனவே பல மடங்கு அதிகமாக கட்டணம் உள்ள ஸ்டார்லிங்க் இந்தியாவில் எடுபட வாய்ப்பே இல்லை என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் செயல்பட்டு வருவதால் சாட்டிலைட் இணையதள சேவைக்கும் 5ஜி நெட்வொர்க் வேகத்திற்கும் பெரிய அளவு வித்தியாசம் இருக்காது என்றும் எனவே ஒரு சிறிய அளவு வேகம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக 50 மடங்கு அதிகமாக கட்டணம் தர இந்தியாவில் யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.