திரையுலகில் பாடகியாக அறிமுகமான அவர், “ஜில்லா விட்டு ஜில்லா வந்தால்” என்ற ஈசன் பட பாடலின் மூலம் பிரபலமானார். நடன இயக்குனராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர், தற்போது மட்டுமே சில கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். குறிப்பாக, “சிறகடிக்க ஆசை” சீரியலில் சிந்தாமணி கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தைக் கொடுத்துள்ளது.
சமீபத்திய பேட்டியில், “இந்த சீரியலில் நான் இப்போதுதான் அறிமுகமாகியுள்ளேன், ஆனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளேன். சீரியலை பார்த்த என் நண்பர்கள் பலரும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் வெளியே செல்லும் போது, ரசிகர்கள், ‘நீங்கள் தானே சிந்தாமணி? ஏன் மீனாவுக்கு எதிரியாக நடிக்கிறீர்கள்? ஏன் மீனாவுக்கு தொல்லை கொடுக்கிறீர்கள்?’ என்று திட்டுகிறார்கள்.
அந்த விமர்சனங்களை கேட்டவுடன், என் கதாபாத்திரம் மக்கள் மனதில் பதிந்துவிட்டதை உணர்ந்தேன். அதில் எனக்கு மகிழ்ச்சி. இது எனக்கான பிளஸ் பாயிண்ட்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “சில தோழிகள் ‘தயவுசெய்து வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம்’ என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆனால், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் சிறப்பாக நடிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றும் அவர் கூறினார்.