பாண்டியராஜனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள சில ஒற்றுமைகள்.. இதை கவனிச்சீங்களா?

By Keerthana

Published:

நடிகர் பாண்டியராஜன் மிகச்சிறந்த இயக்குனர், சிறந்த காமெடி நடிகரும் கூட. தனக்கான கதாபாத்திரத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்து அதேபோல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தியவர்.

ஆண்பாவம், கோபாலா கோபாலா உள்பட பல படங்களில் தன்னையே கிண்டல் செய்து, அதேநேரம் மக்களை ரசிக்க வைத்து பெரிய அளவில் புகழ் பெற்றவர். அதேபோன்ற பாதையைத்தான் சிவகார்த்திகேயனும் தேர்ந்தெடுத்திருப்பார்.

குபீர் சிரிப்பு குமரிமுத்து.. தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தாத அற்புத கலைஞன்..!

நடிகர் பாண்டியராஜன் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின்னர் நடிகராக வந்தார் என்றால், சிவகார்த்திகேயன் விஜய்டிவியின் ஸ்டண்டப் காமெடியனாக அறிமுகமாகி, பின்னர் அதே பாணியில் தன்னையே கிண்டல் செய்யும் கதாபாத்திரங்களில் நடித்து பாண்டியராஜன் போலவே படங்களை ஹிட் அடிக்க வைத்தார்.

மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, ரஜினி முருகன், மான் கராத்தே ஆகிய படங்கள் கிட்டத்தட்ட பாண்டியராஜனின் படங்களில் உள்ள கேரக்டரை போலவே இருக்கும். இந்த படங்களில் ஆக்சன் ரோல்கள் இருக்கும் என்றாலும், பாண்டியராஜனின் சாயலில் காமெடி கலந்த ரோலில் ஹீராவாக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார்.

ஆக்சன் ஹீரோவாக சட்டென சிவகார்த்திகேயன் மாறினாலும், காமெடி டிராக் கலந்த ரோலில் நடித்தால், அவரது படங்கள் எல்லாம் இன்றும் மாஸாக ஓடும். ஆக்சன் ஹீரோ கதையிலும் அதனால் தான் தன்னுடைய பாணியை சிவகார்த்தியேன் தொடர்கிறார்.

மிக சீரியஸான கதையாக இருந்தாலும் சிரிக்க வைக்கும் கேரக்டர்களில் தான் சிவகார்த்திகேயன் இருப்பார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்ட சிவகார்த்திகேயன், ஆக்சன் ஹீரோவாக மாற வேண்டுமா அல்லது காமெடி டிராக்கில் பயணிக்க வேண்டுமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

விஜய்க்கு அடுத்தபடியாக குழந்தைகளை அதிகம் ரசிகராக கொண்டவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். எனவே அவர் தனது காமெடி டிராக்கில் இருந்து திரும்பாமல் அப்படியே தொடர்ந்தால், நிச்சயம் குழந்தைகள் அவரது படங்களை என்றும் விரும்பி பார்ப்பார்கள் என்கிறார்கள் ரசிகர்கள். ஆண் பாவம் பார்ட் 2 சிவகார்த்திகேயன் நடித்தால் நிச்சயம் அற்புதமாக வரும்.

மேலும் உங்களுக்காக...