இரட்டை வேடத்தில் சிம்பு! மாஸான கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் சிம்பு 48 படத்தின் அப்டேட்!

Published:

பத்துதல படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக கமல்ஹாசன் அவர்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு எஸ்.டி.ஆர் 48 படத்தில் நடிக்க தயாராக உள்ளார்.

இந்த படம் சம்பந்தப்பட்ட முழு அப்டேட் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சிம்பு அண்ணன், தம்பி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக மோத உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரியணைக்காக போட்டி போடும் சகோதரர்களின் கதை தான் இந்த படத்தின் மையக்கரு என கூறப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு அண்ணன் தம்பியாக மன்மதன் படத்தில் இரட்டை வேடக் கதாபாத்திரத்தில் வேற லெவலில் மாஸ் காட்டி இருந்தார். மன்மதன் படத்தில் அண்ணன் தம்பிகள் பாசமாக இருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அண்ணன் தம்பி இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் அடித்து கொள்கிற மாதிரியான காட்சிகள் தான் அதிகமாக இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

இரண்டு கதாபாத்திரத்தில் சிம்பு படத்தில் நடிக்க இருப்பதால் இரண்டு வித்தியாசமான மாற்றங்கள் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக சிம்பு கிட்டத்தட்ட 15 வருடத்திற்க்கு முன்னாடி இருந்த ஸ்லிம் ஆன லுக்கிற்கு மாறப்போகிறாராம். இவருடைய சமீபத்திய புகைப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலாக பார்க்கப்படுகிறது. இதெல்லாம் எஸ்டிஆர் 48 படத்திற்க்கான கெட்டப்பாக இருக்கலாம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்த படத்திற்காக பிரீ ப்ரொடெக்ஷன் அதிக நேரம் எடுக்கும் என்பதால் இப்போது இருந்தே அதற்கான செட் போடும் பணிகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. அதாவது அதற்க்காக ஒரு அரண்மனையை வடிவமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கண்ணதாசனை வீட்டிற்குள் பூட்டி வைத்த எம்.ஜி.ஆர்! சிரிக்க சிரிக்க என்னை சிறையிலிட்டாள் பாடல் உருவான கதை!

இது வரைக்கும் சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கக்கூடிய ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் இரண்டு பேருமே ஆறாவது முறையாக இணைந்துள்ளனர். இந்நிலையில் பாடல்களும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப அதிரடியாக இருக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

அடுத்தடுத்து சிம்பு 48 படத்தின் சுவாரசியமான தகவல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு வரவழைத்து கொண்டிருக்கிறது.

 

மேலும் உங்களுக்காக...