இனிமே அப்பா தயவே வேண்டாம்!.. அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஹீரோவை இயக்கப் போறாரா?..

Published:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதுவரை அந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 18 கோடி ரூபாய் வசூல் மட்டுமே பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடித்த இந்த படத்தில் செந்தில், தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படம்:

ரஜினிகாந்த் இந்த படத்தில் வெறும் 10 நிமிடங்கள் கேமியோ ரோலில் வருவார் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விக்ராந்தின் தந்தை மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சுமார் 40 நிமிடங்கள் ரஜினிகாந்த் நடித்து இருந்தார்.

லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி எல்லாம் நடத்தியது. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய காக்கா கழுகு கதை நடிகர் விஜயை தாக்கி பேசியதாக சர்ச்சை விடுத்த நிலையில் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய வசூல் குவிந்தது. ஆனால் அந்த சர்ச்சை எல்லாம் கிடையாது என லால் சலாம் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்து சண்டையை முடித்து வைத்த நிலையில் லால் சலாம் படத்தின் வசூல் பெரிய அளவில் குவியவில்லை.

சித்தார்த் தான் ஹீரோவா?

ரஜினிகாந்த் நடிக்காமல் இருந்தாலே லால் சலாம் திரைப்படம் ஓடி இருக்கும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த படத்தில் அப்பா உதவி இல்லாமல் படத்தை இயக்கப் போவதாக கூறுகின்றனர்.

மேலும், சமீபத்தில் நடிகர் சித்தார்த்தை சந்தித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பரான கதை ஒன்றை சொல்லி இருப்பதாகவும் விரைவில் அந்த கதையின் முழு ஸ்க்ரிப்ட்டையும் தயார் செய்து கொடுத்து சித்தார்த்தை வைத்து புது படத்தை இயக்க முடிவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தீவிரம் காட்டிய வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்து அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இந்நிலையில் அடுத்த படத்தை ரொம்பவே யோசித்து சித்தார்த் முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...