ஹேக்கர்களிடம் சிக்கிய பாடகி ஸ்ரேயா கோஷல்.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை..!

  பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயாவின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது கணக்கிலிருந்து அனுப்பப்படும் எந்த இணைப்பையும் திறக்க வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்,…

shreya

 

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயாவின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது கணக்கிலிருந்து அனுப்பப்படும் எந்த இணைப்பையும் திறக்க வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது எக்ஸ் கணக்கு பிப்ரவரி 13ஆம் தேதி ஹேக் செய்யப்பட்டது என்றும், அதை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எக்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள தனது முழு திறமையை முயற்சி செய்ததாகவும், ஆனால் இதுவரை எந்தவிதமான சரியான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தனது ஹேக் செய்யப்பட்ட கணக்கிலிருந்து வரும் எந்த ஒரு இணைப்பையும் திறக்க வேண்டாம் என்றும், அதில் பதிவு செய்யப்படும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம் என்றும், அவை அனைத்தும் ஸ்பேம் இணைப்புகளாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணக்கு மீண்டும் மீட்டெடுக்கப்பட்டவுடன், தனிப்பட்ட முறையில் ஒரு வீடியோ மூலம் தகவல் வழங்குவேன் என்றும், அதன் பிறகு தனது பக்கத்தை திறக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் ஏராளமான திரையுலக பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட த்ரிஷாவின் எக்ஸ் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.