சில நாட்களுக்கு முன் சாந்தனுவும் அவரது மனைவியும் நடித்த கொஞ்சம் கொரோனா, நெறைய காதல் என்ற குறும்படம் வந்திருந்தது. லாக் டவுனில் கணவன் , மனைவி எப்படி அட்ஜட்ஜ் செய்து விட்டு கொடுத்து வாழ்வது என்பது பற்றிய படமது.
இப்படம் சிறிது நேரம் ஓடினாலும் ஜாலியாகவும் அதே நேரத்தில் வாழ்வின் யதார்த்தங்களையும் உணர்த்தியது.
இந்த நிலையில் இப்படத்துக்கு ஆதரவு குவிந்து வருவதை பார்த்து சாந்தனு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்தணும்னு தோணுச்சி, அதனால் நானும் கிக்கியும் சேர்ந்து முடிவு செய்த குறும்படம்தான் அது. வீட்டுல உள்ள வெளிச்சத்துலயே செல்ஃபோன்லயே எடுத்த படம். இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு நினைக்கவில்லை என சாந்தனு கூறியுள்ளார்.